சனி, 7 மார்ச், 2015

போலி மார்க்சிய, போலி முற்போக்கு 
சிந்தனைக் குள்ளர்களுக்கு எச்சரிக்கை!
--------------------------------------------------------------------
நிர்பயா ஆவணப் படம் குறித்த மார்க்சியப் பார்வை!
---------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------   
சமூகவியல் ஆய்வுகளின்படி, மார்க்சிய ஆய்வின்படி, இந்திய
சமூகம் ஓர் அரை நிலப்பிரபுத்துவ சமூகம் (SEMI- FEUDAL) ஆகும்.
இங்கு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் படும் பெண்கள்
புகார் செய்வதில்லை; புகார் செய்ய முன்வருவதில்லை.
மீறிப் புகார் செய்தாலும், காவல் துறை அதைத் தட்டிக்
கழிக்கவே முயல்கிறது.
--------------------------------------------------------------------------------------------------
கிராமப் புறங்களில் நிகழும் வன்புணர்ச்சிகள் புகார் செய்யப்
படாமலும், பதிவு செய்யப் படாமலும் அமுங்கி விடுகின்றன.
நகர்ப்புறங்களில், படித்த நடுத்தர வர்க்கத்தினரும், வன்புணர்ச்சியை
வெளியே சொல்வதால் ஏற்படும் கொடிய பின்விளைவுகளை
நினைத்து அஞ்சி, உள்ளுக்குள்ளே குமைந்து கொண்டு, நரக
வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். வெகு நீண்ட காலமாக,
இந்தியப் பெண்கள் வன்புணர்ச்சியை எதிர்த்துப் போராடி
முறியடிக்க முடியாமல் அடங்கிக் கிடந்தனர். நிகழ்ந்த
வன்புணர்ச்சிகளுக்கும், பதிவு செய்யப்பட வன்புணர்ச்சிகளுக்கும்
இடையிலான இடைவெளி மிக நீண்டதாக இருந்தது.  
---------------------------------------------------------------------------------------------
நிர்பயா வன்புணர்ச்சி நிகழ்வின் கொடூரம், அதைத் தொடர்ந்து
தன்னெழுச்சியாக வெடித்தெழுந்த டில்லி மக்களின்
ஆவேசப் போராட்டங்கள், இவை  நாட்டின் பிற
நகரங்களுக்கும் பரவியதுமான தொடர் நிகழ்வுகள் ஆகியவை
இந்தத் தேக்க நிலையை உடைப்பதில் முக்கிய
பங்காற்றின. நாட்டின் பொது மனச்சாட்சியை இந்தப்
போராட்டங்கள் தட்டி எழுப்பின. வன்புணர்ச்சிக் குற்றத்துக்கான
தண்டனைகள் கடுமை ஆக்கப் பட்டன.
--------------------------------------------------------------------------------------------------------
வன்புணர்ச்சிக்கு இலக்காகி, இதுவரை அதை வெளியே
சொல்லப் பயந்துபோய் இருந்த பெண்கள், மக்களின்
போராட்டங்கள் உருவாக்கிய புதிய சூழ்நிலைகளின்
காரணமாக, தைரியம் அடைந்து, புகார் தர முன்வந்தனர்.
சுருங்கக் கூறின், மூடி மறைப்பதால் அல்ல, துணிந்து
புகார் தருவதன் மூலமே, வன்புணர்ச்சியை முறியடிக்க
முடியும் என்ற உளவியல் பெண்களின் மனத்தில்
கட்டமைக்கப் பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------
வெகுமக்களின் போராட்டங்களால் கட்டமைக்கப் பட்ட 
இந்த உளவியலைத் தாக்கித் தகர்த்து எறிகிறது நிர்பயா 
பற்றிய "இந்தியாவின் மகள்" என்னும் ஆவணப் படம்.
அதனால்தான் இப்படத்தை எதிர்க்கிறோம்; எதிர்க்க 
வேண்டும். இப்படத்தின் இயக்குனர் லெஸ்லி உட்வின்,
இங்கிலாந்து நாட்டுப் பெண்; தாமே வன்புணர்ச்சிக்கு 
இலக்கானவர். எனினும், இந்திய சமூகத்தின் அரை 
நிலப்பிரபுத்துவத் தன்மை குறித்து எவ்விதப் பிரக்ஞையும்
அற்றவர். ஐரோப்பிய சமூகம் வன்புணர்ச்சிக்கு இலக்கான 
பெண் மீது பரிவு காட்டுவது போன்று, இந்திய சமூகம் 
நடந்து கொள்ளாது என்பதெல்லாம் இந்தப் பெண்மணிக்குப் 
புரிவதில்லை. எனவே இப்படம் இந்த மண்ணுக்கு ஏற்ற 
படம் அன்று.
-------------------------------------------------------------------------------------------------- 
 வன்புணர்ச்சிக்கு இலக்காகும்  பெண் எவ்வித எதிர்ப்பையும் 
காட்டக்கூடாது என்பதுதான் இந்தப் படம் வழங்கும் 
ஒரே செய்தி. இவ்வாறு நிர்பயா நிகழ்வின் விளைவாக,
கட்டமைக்கப்பட்ட, வன்புணர்ச்சியை எதிர்த்துப் போராட
வேண்டும் என்ற உளவியலை இப்படம் ஒரே நொடியில் 
தகர்த்து விடுகிறது.
-----------------------------------------------------------------------------------------------
ஒரு அச்சமூட்டும் உளவியலை (FEAR PSYCHOSIS) இப்படம் 
கட்டமைக்கிறது. தன் வாழ்வில் என்றேனும் ஒருநாள்,
வன்புணர்ச்சிக்கு இரையாகும்போது, எதிர்ப்புக் காட்டாமல் 
அடங்கிப் போய்விட வேண்டும்  என்ற நினைப்பை, எண்ணத்தை 
பெண்களின் மனத்தில் ஏற்படுத்துகிறது இந்தப் படம். இவ்வாறு 
பிற்போக்குத் தனமான உளவியலை இந்தியப் பெண்கள் 
மனத்தில் இப்படம் கட்டமைக்கிறது. எனவேதான் நாங்கள் 
இப்படத்தை எதிர்க்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------- 
போலி மார்க்சிஸ்ட்களும், போலிப் பெரியாரிஸ்ட்களும்,
போலி முற்போக்கு வகையறாக்களும் இன்ன பிற 
குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களும் 
இப்படத்தை ஆதரித்து தாங்கள் மக்களின் எதிரிகள் 
என்று பிரகடனம் செய்யட்டும். கருத்துரிமை என்ற பெயரில் 
இப்படத்தை ஆதரிக்கும் தாராளவாதிகளுக்கு  (LIBERALS)
எதிரி வர்க்கக் கருத்துக்களை வெளியிடுவதற்கு, மார்க்சியம்
அனுமதிப்பதில்லை என்பதைப் புரிய வைப்போம்.
---------------------------------------------------------------------------------------------
ஒருநாள் வரும்! அன்று பாட்டாளி வர்க்க அரசு இந்த 
நாட்டில் அமையும். அன்று மக்களுக்கு எதிரான 
பிற்போக்குக் கருத்துகளைச் சொல்லும் இந்தக் 
குட்டி முதலாளித்துவ அற்பர்களைச் சிறையில் தள்ளுவோம்.
தேவைப் பட்டால் ANNIHILATE பண்ணுவோம்.
------------------------------------------------------------------------------------------------
நாம் உணர்த்தும் நீதியை 
மறுப்பவர்க்கு இங்கு இடம் இல்லை 
----பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கீதம்-----
-------------------------------------------------------------------------------------------
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
இப்பொருள் குறித்து நாங்கள் வெளியிட்டுள்ள பிற 
கட்டுரைகளையும் படிக்க வேண்டும் என்று 
வலியுறுத்துகிறோம்.அப்போதுதான் ஒரு ஒருங்கிணைந்த 
புரிதல் கிடைக்கும்.
---------------------------------------------------------------------------------------------------   
                    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக