திங்கள், 2 மார்ச், 2015

அமெரிக்காவில் தஞ்சம் அடைந்த 
காஸ்ட்ரோவின் மகள் அலினா!
FIDEL CASTRO's DAUGHTER GOT ASYLUM IN U.S.
--------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------- 
1) கியூபா நாட்டின் அதிபரும் கம்யூனிஸ்ட் புரட்சியாளரும்(!)
ஆகிய பிடெல் காஸ்ட்ரோவின் மகள் திருமதி அலினா 
கியூபாவில் இருந்து வெளியேறி, ஸ்பெயின் தலைநகர் 
மாட்ரிட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து அமெரிக்க அரசிடம் 
தஞ்சம் கோரினார். தஞ்சம் வழங்கப்பட்டதை ஒட்டி அவர் 
அமெரிக்கா சென்றார். அவர் தஞ்சம் கோரிய நாள், 1993 
டிசம்பர் 23ஆம் நாள் ஆகும்.
------------------------------------------------------------------------------------------- 
2) கியூபாவின் சோஷலிசம் ஒரு முட்டுச்சந்தை அடைந்து விட்டது 
என்றும் காஸ்ட்ரோ ஒரு கொடுங்கோலன் என்றும் திருமதி 
அலினா கூறினார்.
4) அலினா ஒரு முன்னாள் மாடல் அழகி ஆவார். தமது 37ஆம் 
வயதில் அமெரிக்காவிடம் தஞ்சம் கோரிப் பெற்ற அவருக்குத் 
தற்போது (2015) வயது 57 ஆகும்.
5) தமது பதினைந்து வயது மகளை கியூபாவிலேயே விட்டுவிட்டு 
வந்த இவர் எப்படியும் தமது மகளைத் தன்னுடன் அழைத்துக் 
கொள்வேன் என்றார்.
------------------------------------------------------------------------------------------------------ 
6) அலினாவின் தாயார் 'நடிலா ரவுல்டா'வை  (NATILA REVUELTA) 
கியூபப் புரட்சியின்போது, காஸ்ட்ரோ காதலித்தார். இவர் மூலம் 
அலினா பிறந்தார். எனினும் அப்போது காஸ்ட்ரோவுக்கு ஏற்கனவே 
திருமணமாகி இருந்தது.
--------------------------------------------------------------------------------------------------- 
7) ஏற்கனவே பிடெல் காஸ்ட்ரோவின் தங்கை  ஜுனிடா (JUANITA)
1965இல் கியூபாவில் இருந்து வெளியேறித் தஞ்சம் கோரிப் பெற்று 
மியாமியில் வாழ்ந்து வருகிறார். (அமெரிக்காவில் புளோரிடா 
மாநிலத்தில் உள்ளது மியாமி என்பதை ஓரளவேனும் பூகோளம் 
கற்ற வாசகர்கள் அறிந்து இருக்கலாம்).
------------------------------------------------------------------------------------------------ 
8) பத்துப் பொண்டாட்டி, பதினைந்து வைப்பாட்டி, பொண்டாட்டிக்குப் 
பிறந்த குழந்தைகள், வைப்பாட்டிக்குப் பிறந்த குழந்தைகள்  என்று
 வாழ்வதன் பெயர் கம்யூனிசம் அல்ல. அதன் பெயர் காமாந்தகாரம் 
ஆகும். மெய்யான கம்யூனிசம் நுகர்வு மறுப்பை அடிப்படையாகக் 
கொண்டது.
------------------------------------------------------------------------------------------------------ 
*******************************************************************88888          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக