ஞாயிறு, 2 அக்டோபர், 2016

(8) ரங்கநாயகம்மாவின் அறிவியல் அணுகுமுறை!
ரங்கநாயகம்மாவின் நூல் திறனாய்வு!
"சூத்திரர்களும் ஆரியர்களே, அவர்கள் சத்திரியர்களே"
என்ற அம்பேத்காரின் கருத்தை மறுக்கும் நூல்!

------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------
தமது நூலாக்கத்தில் எளிய, அறிவியல் வழிப்பட்ட
அணுகுமுறையை ரங்கநாயகம்மா கையாள்கிறார்.
ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்துக் கொள்கிறார்;
உதாரணமாக, ஆரியப் படையெடுப்பு. இதன் மீதான
அம்பேத்காரின் தேவையான கருத்துக்களைத்
தொகுத்துக் கொள்கிறார். அக்கருத்தை நியாயப்
படுத்தி அம்பேத்கார் முன்வைக்கும் வாதங்களை
அடுக்குகிறார்; அதன் பின் அவற்றைப் பரிசீலிக்கிறார்.

அவற்றுள் ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றை, பாராட்டப்
படவேண்டியவற்றை ஏற்கிறார்; பாராட்டுகிறார்.
அதே நேரத்தில்,அக்கருத்துக்களின் முரண்பாடுகளைச்
சுட்டிக்காட்டி அவற்றின் மீது விமர்சனம் வைக்கிறார்.
மாற்றுக் கருத்துக்களையும் முன்வைக்கிறார்;
பரிசீலிக்கிறார். அம்பேத்காரின் கருத்துக்கள்
தவறானவை என்று கருதினால், அவை எப்படித்
தவறானவை என்றும் நிறுவுகிறார்.

நூலின் பெரும்பகுதி அம்பேத்காரின் நீண்ட
தொடர்ச்சியான மேற்கோள்களால் நிரம்பி வழிகிறது.
எங்கிருந்தோ ஒரு மேற்கோளை உருவிப்போட்டு,
துண்டு துண்டாகவும் தொடர்ச்சியற்ற நிலையிலும்
மேற்கோள்களைக் கையாண்டு, அம்பேத்காரை
விமர்சிக்கிறார் என்று கூறுவதில் துளியும்
உண்மையில்லை. நூலைப் படித்தே
பார்க்காதவர்களின் இழிந்த பொய்கள் அவை.

சூத்திரர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களா?
----------------------------------------------------------------------------------

சூத்திரர்களும் ஆரியர்களே!
----------------------------------------------------
"சூத்திரர்கள் யார்?" என்ற நூலை அம்பேத்கார்
எழுதினார். அதில் சூத்திரர்களும் ஆரியர்களே
என்று கூறுகிறார். இதோ அம்பேத்கார் கூறுகிறார்:

"1) சூத்திரர்களும் ஆரியர்களே. 2) சூத்திரர்கள்
சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக
இருந்தனர். 3) பழங்கால ஆரிய சமுதாயத்தைச்
சேர்ந்த, மிகச் சிறந்த, சக்தி வாய்ந்த மன்னர்களில்
சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால்,
சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய
வர்க்கத்தினராக இருந்தனர்."
---- அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-13, பக்-183 

அம்பேத்காரின் இந்தக் கருத்தை பெரியாரிஸ்டுகள்
ஒருநாளும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், சூத்திரன்
எப்படி ஐயா ஆரியன் ஆவான் என்று எதிர்க்கேள்வி
கேட்பார்கள்.





     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக