திங்கள், 3 அக்டோபர், 2016

ஜி மெயில், கூகுள் ஆகியவை நத்தை வேகத்த்தில்
கிடைப்பதற்கு BSNLஐக் குறைகூறுவதுதான்
இதில் விசித்திரம். தொடர்புடைய "SERVER"களின்
பிரச்சினையை எல்லாம் BSNL மீது சுமத்துவது
என்ன நியாயம்? பழி ஓரிடம், பாவம் ஓரிடம்
என்பது போன்றதே இது.
**
1) BSNLஇல் மறைமுகக் கட்டணம் கிடையாது.
Hidden chargesஐக் காட்ட முடியுமா?
2) BSNL இன் பில்கள் (Bills) வெளிப்படையானவை:
ஒளிபுகும் தன்மை உடையவை (transparent).
மற்ற தனியார் நிறுவனங்களின் பில்களை
பரிமேலழகர் நச்சினார்க்கினியர் உரை இல்லாமல்
புரிந்து கொள்ள முடியாது.
3) நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு, பட்டிக்காடுகளில்
பெருஞ்செலவிலான installationஐ மேற்கொண்டு
கிராமப்புறங்களில் சேவை வழங்குவது BSNL மட்டுமே.
எந்தக் கிராமத்திலாவது தனியார் நிறுவனங்கள்
பிராட்பேண்ட் சேவை வழங்குவதாகக் கூற முடியுமா?
4) இவையெல்லாம்தான் BSNLஇன் விசித்திரங்கள்.
            

SPEED TEST எடுப்பதை BSNL ஊக்குவிக்கிறது!
------------------------------------------------------------------------------
ஒவ்வொரு BSNL வாடிக்கையாளரும்  அவ்வப்போது
SPEED TEST எடுத்துக் பார்ப்பதை BSNL ஊக்குவிக்கிறது.
ஸ்பீட் மோசமாக இருந்தால் புகார் கூறுங்கள்.
எக்சேஞ்சில் உங்களின் PORT எவ்வாறு உள்ளது
என்று CHECK பண்ணிப் பார்த்து, சரி செய்வார்கள்.
**
SNR (Signal to noise ratio) என்பது ஒரு முக்கிய காரணி.
இது போதிய அளவு இல்லாவிட்டால் பிரச்சினை
ஏற்படும்.
**
அ)  உங்களுக்கு அதிக ஸ்பீட் வேண்டுமென்றால், அதிக
ஸ்பீட் தரும் திட்டத்திற்கு (plan) மாறிக் கொள்ளலாம்.
ஆ) சாதாரண மாடத்திற்கு (modem) பதிலாக VDSL modem
பொருத்திக் கொள்ளலாம். VDSL means very high speed.
அதற்குரிய பிளானைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.
**
இ) dynamic IPக்குப் பதிலாக STATIC IP பெற்றுக்
கொள்ளலாம். BSNL மட்டுமே குறைந்த விலையில்
static IP தருகிறது. மற்ற நிறுவனங்கள் ஆனை விலை,
குதிரை விலை சொல்லுவார்கள்.
**
மேற்கூறிய ஆலோசனைகள் மிகவும் பொதுவானவை
(too general). ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில்
உங்களின் தேவைக்கு ஏற்ற பிராட்பேண்ட் சேவையை
BSNL வழங்கத்  தயாராக இருக்கிறது. உங்களின்
தேவையை உரியவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
**
பின்குறிப்பு: சர்வீஸில் உள்ளவர்களிடம் பேசுங்கள்.
நான் பணிஓய்வு பெற்று விட்டேன். நன்றி.         

 

 BSNL வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்வதில்லை.
சேவை விரிவாக்கம் (service extension) என்பதில்
நிறையத் தொழில்நுட்பச் சிக்கல்களும் நிதி
ஒதுக்கீடும் உள்ளன. உங்களுக்குச் சொல்லப்பட்ட
பதிலை, சர்வீஸில் இருந்தபோது நானும் சொல்லி
இருக்கிறேன்.அதற்கான காரணங்கள் purely technical.
மற்றப்படி வேண்டுமென்றே சேவை வழங்க மறுப்பதாகக்
கருதுவதில் நியாயமில்லை.
   
எதற்கெடுத்தாலும் BSNL மீது குறை கூறுவது ஒரு
ஃபேஷனாகி விட்டது என்று எங்களின் அன்றைய
CGM திரு ............... அவர்கள் எங்களின் உள்ளரங்கக்
கூட்டத்தில் கூறுவார். நாட்டுப்பற்று (patriotism)
அதிகரிக்க அதிகரிக்க BSNL மீதான குறைகூறல்களும்
குறைந்து கொண்டே வரும் என்று கூறுவார். இதை
இப்போது நினைத்துப் பார்க்கிறேன். BSNL உங்கள்
சொத்து; உங்கள் நிறுவனம். அதன் வளர்ச்சியும்
வாழ்வும் உங்களின் வளர்ச்சி.  


ஒரு இடத்தில் சேவை வழங்க முடியவில்லை என்று
வாடிக்கையாளரிடம் கூறும்போது, அளவிட முடியாத
சோகத்துடன்தான் அதை நாங்கள் கூறுகிறோம்
என்பதைத் தாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து வந்த அரசுகளின் ஒரே வஞ்சனையையும்
மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்கொண்டு,
எங்களின் CGM முதல் ரெகுலர் மஸ்தூர் வரை
கடுமையாக, காட்டில் மேட்டில், பனியில், வெயிலில்
உழைத்துத்தான் இந்த BSNL என்னும் மக்களின்
சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறோம்.
**
தனியார் நிறுவனங்களின் கண்ணில் வெண்ணெயை
வைக்கும் அரசாங்கம் BSNLஇன்  கண்ணில் சுண்ணாம்பை
வைத்தபோதும் நாங்கள் குருடாகிப் போகாமல்
நிற்கிறோம். இதில்  வாதம் செய்து எங்களை நிரூபிக்க
வேண்டிய தேவை இல்லை. BSNLஇன் mooto இதுதான்:
"SERVICE IS OUR MOTTO".  தனியார் நிறுவனங்களின் motto
இதுதான்: "PROFIT IS OUR MOTTO." கனி இருப்பக் காய்
கவர நினைக்க வேண்டாம் என்பதே எங்கள்
வேண்டுகோள். BSNLஇல் குறைகள் இல்லாமல்
இல்லை. குறைகளையே பெரிது படுத்திக் கொண்டு
எந்நேரமும் குற்றமும் பழியும் கூறிக் கொண்டிருப்பது
நியாயமா?
**
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.  


இந்த நிமிடம் வரை BSNLன் பங்குகளில் 0.00000000001 சதவீதம்
கூட தனியாரிடம் போகாமல் பாதுகாத்து வருகிறோம்.
ஏற்கனவே இருக்கிற, நன்கு நிலைபெற்று நிற்கிற
BSNL போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப்
பாதுகாப்பது மக்களின் கடமையும் கூட.


நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, உபயோகிப்பாளர்களிடம் இருந்தும் ஒரு குறைந்தபட்ச
தொழில்நுட்பப் பரிச்சயத்தைக் கோருகிறது. அத்தகைய
குறைந்தபட்ச அறிதல் அவர்களிடம் இருக்குமேயானால்,
பல்வேறு எளிய குறைபாடுகளை அவர்களே சரி செய்து
கொள்ள முடியும். இதை உணர்ந்தமையால்,
சென்னைத் தொலைபேசி சார்பாக, நாங்கள் பல
ஆண்டுகளுக்கு முன்பே Know your broadband என்ற நான்கு
பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டு, வாடிக்கையாளர்களுக்கு  விநியோகித்தோம்.
**
நான் சர்வீஸில் இருந்தபோது, அலுவலகத்திற்கு வரும்
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் speed test பற்றி
அறிமுகம் செய்து, அவர்தம் இல்லத்தில் speed test
எடுத்துப் பார்க்கும்படி ஊக்குவித்தேன்.
**
அடிக்கடி அலுவலகத்தில் வாடிக்கையாளர்களை
வரச்செய்து, கூட்டம் நடத்தி, பிராட்பேண்ட் சேவை
பற்றி விளக்கி, பல்வேறு  எளிய குறைபாடுகளை,
எங்கள் உதவி இல்லாமல், அவர்களே சொந்தமாகச்
சரி செய்து கொள்ளும் அளவுக்குப் பயிற்சி அளித்தேன்.
**
நான் சர்வீஸில் இருந்தபோது, 10 லட்சம் landline
வாடிக்கையாளர்களும் 5 லட்சம் பிராட்பேண்ட்
வாடிக்கையாளர்களும் சென்னைத் தொலைபேசியில்
இருந்தார்கள். என்னுடைய சக்திக்கும் reachக்கும்
உட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு எங்களின்
சேவை குறித்து, அடிப்படையான பல விளக்கங்களை
அளித்து,  அவர்களைத் தயார் படுத்தியது மிகப்
பெரிய பயனை அளித்தது, as per the feedback.
**
இவை ஒரு தகவலுக்காவே தவிர, சுய புராணம் அல்ல.
ஊழியர்கள் சரியில்லை என்றால் எக்சேஞ்சுகளை
முற்றுகை இடுங்கள். அதிகாரிகளை கெரோ
செய்யுங்கள். இதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.
BSNL சரியில்லை என்றால், BSNL அலுவலகங்களில்
போராடுங்கள்; சத்தியாக்கிரகம் செய்யுங்கள்.
இது மக்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும்
ஆகும். BSNLஐத் திருத்துவதில் மக்களுக்கும்
பொறுப்பு உண்டு என்பதை உணர்ந்து. செயலில்
இறங்குங்கள். அதை விட்டு விட்டு, எங்களை விட்டுச்
சென்று விடாதீர்கள். Please dont desert us.
**
தோழர் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு நன்றி.
Long live BSNL! Long live! Long live! நன்றி, வணக்கம்.    

       

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக