வியாழன், 1 ஜூன், 2017

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியிடம்
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்ட கேள்வியும்
அதற்கு அவர் தந்த பதிலும்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கேள்வி:
1) String Theory says that the field particle of gravitational field is
GRAVITON. But this particle is not yet detected in any experiment.
So why dont we go back to the concept of Einstein which says that
the space-time itself is the field of gravitation.

2) What will be the fate of STRING THEORY? For several decades
it remains as a mere theory without any sort of an experimental
evidence. Will it be accepted or discarded?

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் ப்ரியன்
ஸ்கிமிட் (Prof Brian  Schmidt) அவர்கள் இக்கேள்விகளுக்கு
சுருக்கமாகப் பதிலளித்தார்.தீவிர அறிவியல்
விஷயங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால்,
அவரின் பதில் இதுதான்:-
"காத்திருப்போம், அது நிரூபிக்கப் படும். அறிவியலில்
பொறுமை வேண்டும்" என்பதே.

இந்த பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது.
STRING THEORY என்பது வெட்டி வேலை அல்ல; அது
ஒரு நாள் மெய்ந்நிலையாகும் (It will become a reality)
என்று உலகின் உயர்ந்த அறிவியலாளர் கூறியது
எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது.

 எந்தவொரு அறிவியல் உரையும் கேள்வி-பதிலை
உள்ளடக்கியதே. முக்கால் மணி நேரம் உரை, அரை
மணி நேரம் கேள்வி-பதில் என்பது அறிவியல்
உரைகளுக்கு உள்ள குறைந்தபட்ச norm (அளவீடு).
இருப்பினும் ஐஐடி மாணவர்கள் எதிர்பார்த்ததற்கு
மாறாக, நிறையக்  கேள்விகளைக் கேட்கவில்லை.
அவர்களுக்கு அவர் சொன்னது முற்றிலும்
புதிதாக இருந்தது போலும்.  எனவேதான் என்னைப்
போன்றவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.    

என்னால் பணம் செலவழித்து ஆஸ்திரேலியா சென்று
விஞ்ஞானியைச்  சந்தித்து விளக்கம் பெற .இயலாது,
அவரை இங்கேயே வரவழைத்து, அவரிடம் அறிவியல்
பாடம் கேட்கும் வாய்ப்பை வழங்கிய டாக்டர்
ஐயம் பெருமாள் ( பிர்லா கோளரங்கத் தலைவர்)
அவர்களுக்கு நன்றி.
******************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக