சனி, 3 ஜூன், 2017

உலகம் என்பது பூமி. இது உருண்டையாக இருக்கிறது.
இது உண்மை. ஆனால் இந்தப் பதிவில் பிரபஞ்சம்
(universe) பற்றிப் பேசப் படுகிறது. நாம் வாழும் பூமி,
நமது சூரியக் குடும்பம், நமது காலக்சியான
பால் வீதி (Milky Way), இன்னும் கோடிக்கணக்கான
நட்சத்திரங்கள், ,காலக்சிகள், கோள்கள் என்று
ஒட்டு மொத்தமாக உள்ள அனைத்தயுமே பிரபஞ்சம்
(universe) என்று குறிப்பிடுகிறோம். பூமி வேறு,
பிரபஞ்சம் வேறு. பிரபஞ்சம் ஒரு கடல் என்றால்,
அதில் நாம் வாழும் பூமி ஒரு சிறு துளியே.
**
இந்தப் பிரபஞ்சம் தட்டையானது என்று பரிசோதனை
முடிவுகள் கூறுகின்றன. அதையே விஞ்ஞானியும்
கூறுகிறார்.
   
-------------------------------------------------------------------------------------------------
ஒளிவீசும் விடிகாலை சுடர்த் தாரகை!
புவியெங்கும் புகழ் மேவும் ஜெய பேரிகை!
மங்காத கவிமாலை மலர்த் தோரணம்!
கலைஞர் மணிவாயின் மொழி
இன்பத் தமிழ்க் காவியம்!
-------------------------------------------------------------------------------
எனது தமிழ்ப்பற்று, புலமை இரண்டுக்கும் நான்
கலைஞருக்குக்  கடன்பட்டு இருக்கிறேன். எனது
தமிழ்ப் புலமை கலைஞர் அளித்த கொடை.

தமிழ் நல்ல புலவர்க்கு வேல் என்ற பாவேந்தரின்
கூற்றை நடைமுறையில் மெய்ப்பித்தவர் கலைஞர்.

எனது பேச்சாற்றல் கலைஞரைப்  பின்பற்றியதால்
எனக்கு வாய்த்த ஒன்று.

சிறுவயது முதலே எனது ஆளுமையின் உருவாக்கத்தில்
கண்ணுக்குப் புலன் ஆகாமலும் ஆகியும்  நிற்பவர்
கலைஞர்.

கொடிய நெருக்கடி நிலையின்போது,  பாசிச
எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் கடவுளாகத் 
தெரிந்தவர் கலைஞர். தணிக்கை விதிகளை
ஊதித்தள்ளி கலைஞர் முரசொலியில் எழுதும்
கட்டுரைகளே அன்று எமக்கு வேதம். அரசனும்
விதூஷகனும் என்ற கலைஞரின் கட்டுரை
இன்று வரை நெஞ்சில் சிம்மாசனம் போட்டு
இருக்கிறது.

குயில்கள் கூடு கட்டுவது இல்லை. காக்கைகளின்
கூட்டில்தான் குயில்கள் முட்டையிடும். காக்கைகளே
அவற்றைக் குஞ்சு பொரிக்கும். காலப்போக்கில்
குயில் குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்து விடும்.
சிறகு முளைத்தவுடன் குயில் குஞ்சுகள் காக்கையின்
கூட்டை விட்டுப் பறந்து விடும்.

திராவிடக் கூட்டை விட்டு, அப்படிப் பறந்து சென்று,
மார்க்சிய லெனினியம் என்னும் பரந்த வானத்தில்
சிறகு விரித்தவன் நான். என்றாலும் என் தாய் வீடு
திராவிடம்தான். இந்த உண்மையை மறைக்கக் கூடாது.
கடந்து வந்த தடம் தெரிய வேண்டும்.

அகவை 94ஐ தொட்டு நிற்கும் கலைஞரை வாழ்த்த
எனக்கு அருகதை இல்லை. எனவே வணங்கி மகிழ்கிறேன்.
கலைஞர் நீடு வாழ்வார்!
************************************************************************
சந்திரசேகர சுவாமிகள் இருந்த காலத்தில் ஜெயேந்திரர்
புதுப்பெரியவர் என்றே அழைக்கப் பட்டு வந்தார்.
சந்திரசேகரர் மறைவுக்குப் பின்னால், ஜெயேந்திரரை 
புதுப்பெரியவர் என்று விளிக்கும் பழக்கம் முடிவுக்கு
வந்தது.பின்னர் எப்படி அழைப்பது? பெரியவா என்று
அழைத்தார்கள். காலப்போக்கில்  அந்த  விளிப்புடன்
மஹா என்ற அடைமொழியும் சேர்ந்தது. இதற்கு ஏதுவாக
ஜெயேந்திரரும் முதுமை அடைந்தார். எனவே
ஜெயேந்திரரை மஹா பெரியவா என்று மரியாதை
நிமித்தம் அழைக்கிறேன். இனி அதையும் தங்களைப்
போன்றோரின் கருத்துக்கு மதிப்பளித்து கைவிட
முடிவு செய்துள்ளேன்.
  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக