வியாழன், 8 ஜூன், 2017

128 பேர்  கொண்ட மொத்த அமைச்சரவையும்
ஒரே தொகுப்பாக (block) இக்கணக்கில்  எடுத்துக்
கொள்ளப் படுகிறது. முதல்வர் யார் என்பது
இக்கணக்கைப் பொறுத்தவரை கருதலுக்கு
அப்பாற்பட்டது. அது கருத்தில் கொள்ளப்
படுதலைத் தவிர்க்க வேண்டும் என்பதே கணக்கு.
nCn =1 என்பதே கணக்கின் நோக்கம். முதல்வர்
முன்நிலைப் படுத்தப்பட்ட அமைச்சரவை என்றால்
128 வாய்ப்புகள் உண்டு. எவர்  வேண்டுமானாலும்
முதல்வர் ஆகலாம் என்ற தகவல் கணக்கு சார்ந்த
தகவல் அல்ல என்ற அனுமானம் இங்கு தேவை.
**
முதல்வரை முன்னிலைப் படுத்தினால், nC1=n என்பது
தீர்வாகும்.
எனவே அந்த வாக்கியத்தை நீக்கி விட்டால்,
தர்க்க ரீதியாக எல்லாம் சரி என்றாகி விடும்
என்றால், அதை நீக்கலாம்.     முதல்வர்
என்றாலும் யார் முதல்வர் என்பதை தலைமை
முடிவு .செய்யும்.
எனவே ஏற்ற விதத்தில் கணக்கு  தற்போது
புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

வேலை வணங்குவதே வேலை என்றார் வாரியார்!
நூலைப் படிப்பதே வேலை என்கிறேன் நான்!
-------------------------------------------------------------------------------------
என் கையில் ஒரு புத்தகம் இருக்கிறது.
ஆங்கிலப் புத்தகம். லண்டனில் வாங்கி
எனக்குப் பரிசளிக்கப் பட்டது.

குவான்டம் இயற்பியல் அறிஞர்
எர்வின் ஷ்ராடிங்கர் எழுதிய
What is Life with Mind and Matter என்னும்
அற்புதமான புத்தகம் அது.
அதைப்  படித்து மூளையில் ஏற்றும் வரை
வேறு  வேலைக்கு இடமில்லை. 

எனவே முகநூலை மட்டுமல்ல உணவு
உறக்கத்தையும் துறக்கச் சித்தமாக உள்ளேன்.
**********************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக