சனி, 10 ஜூன், 2017

எதையாவது பேசுவதா? காந்தி நேரு பட்டேலுடன்
வைகோவை ஒப்பிடுவதா? அவர்கள் கதற வேண்டிய
அவசியம் என்ன? கருத்து வறட்சியும் சிந்தனைக்
குள்ளத்தனமும் இங்கு அனுமதிக்கப் படுவதில்லை.

சீனி. மாணிக்கவாசகம்

தளபதியின் தாராளவாதம்
திமுகவுக்கு நன்மையல்ல.
மலேசியா துரத்திய
பாம்புக்கு பால் வார்ப்பது ஏன்? .

மேலைநாடுகளில் மூத்தோரை மதிப்பதில்லை.
இந்திய தமிழகப் பண்பாட்டில் மூத்தோரை
மதிப்பது ஒரு முதன்மையான கூறு. அதிலும்
உடல்நலம் குன்றிய முதியோரை வன்முறையால்
(physical force) ஒடுக்குவது ஏற்புடைத்தன்று. எனவே
மிதமிஞ்சிப்போன காழ்ப்புணர்வு தலைக்கேறி
நிற்கிற நிலையில், கலைஞரைக் கைது செய்த
அதிகாரி முகம்மது அலியின் வன்முறையை ஆதரிப்பதும்,
வன்முறைக்கு இலக்கான கலைஞரைத்
தூற்றுவதும் மூத்தோரை மதிக்கும் நற்பண்பு
அறவே அற்றுப்போன பண்பாட்டு வறட்சி
உடையவர்களுக்கே சாத்தியம்.
**
அண்ணன் வைகோ அவர்கள் இன்றும் ஒரு
புட்பால் பிளேயர். உடல்நலம் நன்கு பேணி வருபவர்.
வயது ஆனாலும் இளைஞர். அவர் கைது
செய்யப்படவில்லை. அவருக்கு அனுமதி மறுக்கப்
பட்டது. அவ்வளவே. இரு நிகழ்வுகளையும்
ஒப்பீடு செய்வது பொருந்தா உவமை ஆகும்.
**
அண்ணன் வைகோ மல்லிகையில் எப்படியெல்லாம்
கதறினார் என்று தெரிந்தவர்களுக்காக எழுதப்பட்டது
இந்தப் பதிவு. மல்லிகை என்பது பூச்சரம் என்று
விரும்பி வாங்கித் தலையில் சூடுவோர்க்கு
"மல்லிகைக் காலம்" என்னும்  சொல்லின் தாத்பரியம்
புரியாது. அது குறித்து எனது அனுபவங்களை
பின்னர் எழுதுவேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக