சனி, 3 ஜூன், 2017

என்னை
எனது ஆளுமையை உருவாக்கிய
ஆற்றல்களை எனக்குக் கற்பித்த
முத்தமிழ் அறிஞர் கலைஞரை
வணங்கி மகிழ்கிறேன்!

1970களில் தமிழகத்தின் அறிவுஜீவிகள் மொத்தமும்
தங்களை கலைஞருடன் அடையாளப் படுத்திக்
கொண்டனர். கலைஞரை  ஆதரிப்பதே அன்று
அறிவுஜீவித்  தன்மையாகக் கருதப்பட்டது.
1976-77  நெருக்கடி நிலைக் காலத்தில் மொத்த
இந்தியாவுமே கலைஞரை வியந்து பார்த்தது.
நெருக்கடி நிலையை கலைஞர் எதிர்த்ததே
அதற்குக் காரணம். மொத்த இந்தியாவும்
அக்காலத்தில் கலைஞரின் அசைவுகளை
அனுசரித்தே தனது நகர்வுகளை உருவாக்கிக்
.கொண்டது.
**
தமிழகத்தில் உள்ள மிகக்  குறைவான ஆர்.எஸ்.எஸ்
உறுப்பினர்கள் மற்றும்  ஆதரவாளர்களும் கலைஞரின்
அரவணைப்பில் பாதுகாப்பை உணர்ந்தனர். இதெல்லாம்
கலைஞரின் வரலாறு அல்ல; தமிழகத்தின் வரலாறு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக