ஞாயிறு, 4 ஜூன், 2017

நாலு பேரும் கடந்த பாலம்!
கடந்தது எப்படி?
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
அருணன். பாலு, சந்திரன், டேவிட் ஆகிய
நால்வரும் ஒரு பாலத்தை இருட்டு நேரத்தில்
கடக்க வேண்டும். 17 நிமிடங்களுக்குள்
பாலத்தைக் கடக்காவிட்டால், எதிரிப் படையினர்
அவர்களைச்   சிறை பிடித்து விடுவர். நாலு பேரும்
தலைக்கு 65.4 கிலோ எடையுள்ளவர்கள்.

பாலத்தில் ஒரு நேரத்தில் இருவர் மட்டுமே செல்ல
முடியும். அவர்களிடம் ஒரே ஒரு விளக்கு மட்டுமே
இருந்தது. விளக்கு இல்லாமல் பாலத்தைக் கடக்க
இயலாது.

அருணனால் 1 நிமிடத்திலும், பாலுவால்
2 நிமிடத்திலும், சந்திரனால் 5 நிமிடத்திலும்,
டேவிட்டால் 10 நிமிடத்திலும் பாலத்தைக் கடக்க
முடியும்.

எதிரிப் படைகளிடம் சிக்காமல், நான்கு பேரும்
தங்களுக்குள் ஒத்துழைத்து குறிப்பிட்ட 17 நிமிட
நேரத்திற்குள் பாலத்தைக் கடந்து விட்டனர்.
இது எப்படி நடந்தது?

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*********************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக