திங்கள், 8 ஜூன், 2015

ஏவுகணைத் திட்டத் தலைவர்  
பெண் விஞ்ஞானி டாக்டர் டெஸ்சி தாமஸ் அவர்களின் 
சாதனையைப் போற்றுவோம்!
சுயநிதிப் பல்கலை வேந்தர்களே, பாவத்தைக் கழுவுங்கள்! 
-----------------------------------------------------------------------------------------
அன்று டாக்டர் அப்துல் கலாம்,
பின்னர், டாக்டர்  மயில்சாமி அண்ணாதுரை (சந்திரயான்)  
டாக்டர் அருணன் சுப்பையா (மங்கள் யான்) 
இவ்வாறு விஞ்ஞானிகள் திட்ட இயக்குனர்களாக 
இருந்து சாதனை படைத்ததை அறிவோம்.
**
இந்த வரிசையில் பெண் விஞ்ஞானி டாக்டர் டெஸ்சி தாமஸ் 
அவர்கள், (Dr Tessy Thomas M.Tech, Ph.D )  சாதனை புரிந்துள்ளார். 
திட்ட இயக்குனர் என்ற தகுதியைப் பெற்ற 
முதல் பெண் விஞ்ஞானி இவர்.
**
அக்னி-3, அக்னி-4, அக்னி-5, அக்னி-C ஆகியவற்றில் 
பணியாற்றிச் சாதனை படைத்த இந்த கேரளப்  பெண் 
விஞ்ஞானி டாக்டர் டெஸ்சி தாமஸ் அவர்களின் 
சாதனையைப் போற்றுவோம்.
**
ஈயென இளித்துக் கொண்டு சானியா மிர்சாவுக்கு கௌரவ 
டாக்டர் பட்டம் வழங்கிய சுயநிதிப் பல்கலை வேந்தர் 
ஏ.சி. சண்முகம் அவர்களே, டாக்டர் டெஸ்சி தாமசுக்கு 
கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மறந்தது ஏன்?
(சானியா மிர்சாவின் டென்னிஸ் சாதனைக்கு நியூட்டன் 
அறிவியல் மன்றம் தலை வணங்குகிறது. ஏ.சி சண்முகத்தின் 
வழிசல் தன்மையைக் கண்டு அருவருப்பு அடைகிறது) 
**
சுயநிதிப் பல்கலை வேந்தர்களே,
டாக்டர் டெஸ்சி  தாமஸ் போன்ற விஞ்ஞானிகளுக்கு 
டாக்டர் பட்டம் வழங்கி, உங்கள் பாவத்தைக் கழுவுங்கள்!
**
நியூட்டன் அறிவியல் மன்றம் டாக்டர் டெஸ்சி தாமஸ் 
அவர்களை வணங்கி மகிழ்கிறது.
***********************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக