ஞாயிறு, 28 ஜூன், 2015

படைப்புகள் காலம் சார்ந்தவை; காலத்தோடு பொருந்தி நிற்பவை.
1950களில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய படைப்புகளை,
இன்று 65 ஆண்டுகள் கழித்துப்  படிக்கும்போது, IRRELEVANT என்று 
தோன்றலாம். இதற்குக் காரணம் படைப்பு எழுதப்பட்ட காலம்,
 அன்றைய சமூகச் சூழல் பற்றிய பிரக்ஞை இன்மையே.
**
அண்ணா அவர்கள் தமது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் 
கொள்ளும் ஒரு கருவியாகவே இலக்கியங்களைப் பார்த்தார்;
படைத்தார். பொட்டுப் பூச்சிகளாய் புன்மைத் தேரைகளாய் 
நாயினும் கீழாக அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த 
கோடிக்கணக்கான சூத்திர உழைக்கும் மக்களுக்கு 
அறிவூட்டியவர் அண்ணா.  
**
'கலை கலைக்காகவே' என்ற மேட்டுக்குடிக் கருத்தாக்கத்தை 
உதறி எறிந்து விட்டு, கலை மக்களுக்காகவே என்ற நோக்குடன் 
இலக்கியம் படைத்தவர் அண்ணா.
**
அண்ணாவின் காலம், பெண் குழந்தைகள் பூப்பெய்தியவுடன் 
படிப்பை நிறுத்திய காலம். பிராமணர்கள் சாப்பிடும் இடம் 
என்று உணவகங்களில்  அறிவிப்புப் பலகை இருந்த காலம்.
பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் விரும்பியே அடிமையாக 
இருந்த காலம். எனவேதான் பார்ப்பன விழுமியங்களைத் 
தாக்கித் தகர்த்து சந்திரமோகன் நாடகத்தில் எழுதி 
இருப்பார். 
**
அண்ணாவின் தொண்டால் பணியால் இன்று அடிமைத்தனம் 
ஒழிந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்களும் 
நானும், அன்று சமூகம் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் 
பார்த்திட வேண்டும். காலத்தோடு பொருந்தி நிற்கிற 
ஒரு படைப்பை, அக்காலத்தில் இருந்து துண்டித்து 
எடுத்து, இன்றைய காலம் என்னும் அளவுகோலால் 
அளக்க முற்படுவது சரியன்று.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக