சனி, 6 ஜூன், 2015

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 
போட்டி இடுவதன் உள் மர்மம் என்ன?
----------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் 
மேலாக, ஒரு கொடிய புற்றுநோயைப் போல அரித்துத் 
தின்று கொண்டு இருந்த தீய சக்திகள் தா பாண்டியனும் 
நல்லகண்ணுவும். கோவை மாநில மாநாட்டில், 
நயவஞ்சகமாகவும் நரித்தந்திரத்துடனும் மகேந்திரனைத் 
தோற்கடித்தார் தா பாண்டியன். இந்தக் கீழ்மைக்கு 
ஒத்து ஊதியவர் நல்லகண்ணு.
**
 ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்கப் பாடுபடும் கட்சிதான் 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பிம்பத்தைக் கட்டி 
எழுப்பினார்கள் தா பாண்டியனும் நல்லகண்ணுவும்.
கம்யூனிசத் துரோகி என்று கட்சியினர் மத்தியிலும் 
மக்கள் மத்தியிலும் நன்கு அம்பலப் பட்டுப் போனவர் 
தா பாண்டியன். அந்த அளவு அம்பலப் படாதவர் 
நல்லகண்ணு. இவ்வளவுதான் வேறுபாடு.
**
தா பாண்டியனின் இரும்புப் பிடியில் இருந்து கம்யூனிஸ்ட் 
கட்சியை விடுவிக்காவிட்டால், ஒரு சிறிது கூட கட்சி 
மிஞ்சாது என்ற நிலையில், கடும் போராட்டத்துக்குப் பின்,
தா பாண்டியனின் கொடிய கரங்களை வெட்டி எறிந்துள்ளார் 
மகேந்திரன். அதன் அடையாளம்தான், ஆர்.கே நகர்
இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது.
**
மாநிலச் செயலாளர் பதவியை இழந்த போதிலும், கட்சியில் 
முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார் 
மகேந்திரன். தா பாண்டியனும் அவரது எடுபிடியுமான 
நல்லகண்ணுவும் மொட்டை அடிக்கப்பட்டு மூலையில் 
உட்கார வைக்கப் பட்டு இருக்கிறார்கள். கடுமையான 
உட்கட்சிப் போராட்டத்துக்குப் பின், மகேந்திரன் இந்த 
வெற்றியை ஈட்டி இருக்கிறார்.
**
முறைகேடுகளின் உச்சமாக நடக்கும் இந்த இடைத் தேர்தலின் 
முடிவு எப்படி இருக்கும் என்பது மகேந்திரனுக்கு 
மட்டுமல்ல, அரசியல் நோக்கர்கள் அனைவருக்கும் 
தெரிந்ததுதான்.
**
என்றாலும், மகேந்திரனின் வெற்றி உறுதி ஆகிவிட்ட 
ஒன்று. எப்படி என்று கேட்கிறீர்களா? மகேந்திரன் 
ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டி இடுகிறார் என்று 
நான் கருதவில்லை. அவர் தா பாண்டியனை அல்லவா 
எதிர்த்துப் போட்டி இடுகிறார்! இதில் அவரது வெற்றி 
உறுதியாகி விட்ட ஒன்று.
************************************************************     
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக