வியாழன், 4 ஜூன், 2015

கேப்டன் நியூஸ் டி.வி.யில் விவாதம்!
------------------------------------------------------------
மேகி நூடில்ஸ் உணவுக்குத் தடை மற்றும் 
உணவு குறித்த அறிவியல் கருத்துக்கள் 
-------------------------------------------------------------
நாள்: 03.06.2015 புதன் இரவு 9 to 10 மணி -
------------------------------------------------------------------
பங்கேற்பு:
------------------------
1) டாக்டர் திரு ரவீந்திர தாஸ் 
2) நியூட்டன் அறிவியல் மன்றம் 
தொகுப்பு: திரு இல வேந்தன் 
--------------------------------------------------------
பங்கேற்பாளர்கள் இருவருமே நிகழ்ச்சிக்குத் தாமதமாகச் 
சென்றதால், ஒரு மணி நேர நிகழ்ச்சியானது அரை மணி 
நேரமாகக் குறுகி விட்டது.எனினும், விவாதம் நல்லதொரு 
அறிவியல் விவாதமாக அமைந்தது.
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்து:
1) கூடுமானவரை, புதிதாகச் சமைத்து உண்ணுங்கள்.
2) PROCESSED FOOD வகைகளை உண்ணும்போது 
எச்சரிக்கையும் கவனமும் தேவை.
**
3) Processed Food என்பதற்கு எளிய உதாரணம்:-
ஊறுகாய், அப்பளம் ஆகியவையும் processed food தான்.
எனினும் இவற்றில், தீங்கு விளைவிக்கும் ரசாயனக் 
கலப்பு இல்லை. ஊறுகாய் அப்பளம் இரண்டிலும் 
அதிக அளவு உப்பு சேர்க்கப்படும். இது உயர் ரத்த 
அழுத்தம் உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.
**
ரசாயனங்களை preservative ஆகப் பயன்படுத்தும் 
உணவுகளை உண்பதில் கவனம் தேவை.
******************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக