திங்கள், 22 ஜூன், 2015

"துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்கிறோம்" என்ற முடிவு
தேசியத் தலைவர் அவர்கள் எடுத்த முடிவு. இந்த முடிவு
தேசியத் தலைவர் முதல் கடைசிப் புலி வரை அனைவருக்கும்
பொருந்தும் முடிவு. எல்லோருடைய துப்பாக்கிகளும்
மௌனிக்கும்; ஆனால் தேசியத் தலைவருடைய துப்பாக்கி
மட்டும் வெடிக்கும் என்று இதற்குப் பொருள் கொள்ளுவது
அபத்தம். 22000 மக்களின் நலன் கருதியே, தேசியத் தலைவர்
இந்த முடிவை எடுத்தார். இந்த முடிவை எடுக்காமல்
இருந்தால் 22000 மக்களையும் சிங்களக் காடையர்கள்
அழித்து இருப்பார்கள்.
**
இதுதான் ஆதாரம். இதைப் புரிந்து கொள்வது என்பது,
இதைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அறிவுத்
திறனைக் கோருவது. சர்வதேச அளவில் தலையீடு
நிகழ்ந்த ஒரு மாபெரும் விடுதலைப் போரில்,
தினத்தந்தி கன்னித்தீவு ரேஞ்சுக்கு ஆதாரம் கேட்பது
எப்படிச் சரியாகும்?
**
மற்றுமுள்ள உங்கள் கேள்விகளையும் கேளுங்கள்.
அடுத்த கட்டுரையில் பதில் சொல்கிறேன்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக