செவ்வாய், 9 ஜூன், 2015

அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்தது ஆர்.எஸ்.எஸ் கும்பல் மற்றும் பிஜேபியினர் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
அயோத்தி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களை விசாரித்தால்தான் உங்களுக்கு உண்மை புரியும்.
கட்சி பாகுபாடு இன்றி பிஜேபி, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் அந்த இடிப்பில் பங்குபெற்றனர் மகிழ்வோடு.
பாபர் மசூதியை தாங்களும் சேர்ந்து இடித்தோம் என்பதை பெருமையாக கருதுகின்றனர். இத்தனைக்கும் மற்ற கட்சிகள் பாபர் மசூதி இடிப்பிற்கு எதிராக இருந்தன.
பிறகு ஏன் இடித்தார்கள்?
இடித்தவர்கள் கட்சியின் நிலைப்பாடு பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தங்களை அவர்கள் ஒரு இந்துவாக கருதினார்கள், இந்துவாக உணர்ந்தார்கள், இந்துவாக இடித்தார்கள், இந்துவாக பெருமைப் படுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரின் வெற்றி இங்குதான் இருக்கிறது. ஒவ்வொருவரையும் இந்துவாக உணர வைப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக