ஞாயிறு, 2 அக்டோபர், 2016

கலியுகம் குறித்து அம்பேத்கார் மிகவும்
விரிவாக எழுதி உள்ளார். அவை அனைத்தும் அறிவியல்
வழியில் ஏற்கத் தக்கவை அல்ல.


இந்தக் கருத்தில் பெரியாரையும் சேர்த்தது தவறு.
காந்தி இறந்தபோது, "இந்த நாட்டுக்கு காந்தி நாடு என்று
பெயர் வைக்க வேண்டும்" என்று சொன்னவர் பெரியார்.
காந்தியால் ஈர்க்கப்பட்டுத்தான் பெரியாரே அரசியலுக்கு
வந்தார். காந்தி கூறியபடி கதரைத் தெருத்தெருவாகக்
கொண்டு விற்றார். காந்தி கூறிய கள்ளுக்கடை மறியலில்
பங்கேற்ற பெரியார், தம் தோப்பில் இருந்த தென்னை
மரங்களை வெட்டி எறிந்தார். காந்தியின் மீது பெருமதிப்பு
வைத்து இருந்தவர் பெரியார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக