திங்கள், 4 மே, 2015

(7) மார்க்சியத்தில் சாதிக்குத் தீர்வு உள்ளதா?
தொடர் கட்டுரை-7;  மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------
ரயில்பாதை போட்டும் பயனில்லையே,
காரல் மார்க்ஸ் வருத்தம்!
-------------------------------------------------------------------------------------- 
காரல் மார்க்ஸ் கூறுகிறார்:
"எந்த ஒரு நாட்டின் வரலாற்றிலாவது, அறவே பயனற்றதும்,
முற்றிலும் அபத்தமானதும் (உண்மையில் இகழத் தக்கதும்)
ஆன பொருளாதாரப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக 
மேற்கொள்ளப் பட்டிருப்பதைக் காண முடியும் என்றால்,
அது பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாற்றில்தான்." 
(மூலதனம் தொகுப்பு-3, பகுதி-4, அத்தியாயம்-20,
எங்கல்சின் விளக்கங்களுடன் கூடிய அடிக்குறிப்பு-6)
**
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் 
என்ற மார்க்சின் நம்பிக்கை தகர்ந்து போனதை, மார்க்ஸ் 
இவ்வாறு ஒப்புக் கொள்கிறார்.
**
மார்க்ஸ் மேலும் கூறுகிறார்:
---------------------------------------------
 "க்ரெஃ பெல்ட் நகருக்கு அருகில் ஒரு ரயில்பாதை கூட 
போடப்பட்டது, கிராமப்புறக் கைநெசவாளர்களையும்
நகர்ப்புற "உற்பத்தியாளர்களை"யும் இணைக்கும் பொருட்டு.
ஆனால், பின்னர் இது நிறுத்தப் பட்டது.....".
(மேற்படி நூல், அடிக்குறிப்பு-8, பிரடெரிக் எங்கல்ஸ்)
(க்ரெஃபெல்ட் நகரம் ரைன் நதிக்கு மேற்கில் சிறிது தொலைவில் 
உள்ள நகரம்-- கட்டுரை ஆசிரியர்)
**    
ஆக, ரயில்பாதைகள் போடப்பட்டு, தொழில் வளர்ச்சி பெருகி,
சாதி இந்தியாவில் ஒழிந்து விடும் என்ற மார்க்சின் 1853ஆம் 
ஆண்டின் நம்பிக்கையும் முறிந்து போனது என்பதை 
மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
**
ரயில்பாதை-தொழில் வளர்ச்சி, சாதி ஒழிப்பு பற்றி 
எல்லாம் மார்க்ஸ் குறிப்பிடும் கட்டுரை 1853இல் எழுதப் 
பட்டது. இந்தியாவைப் பற்றி, மார்க்சின் கடைசிக் குறிப்பு 
இதுதான் என்று சில நுனிப்புல் மார்க்சிஸ்ட்கள் நினைத்துக் 
கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையல்ல. அதன் பிறகும் 
மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதி இருக்கிறார் என்பதை 
மேல் பத்திகளில் நிரூபித்து உள்ளோம்.
**
மூலதனம் நூலின் மூன்றாம் தொகுப்பில் இருந்து, முந்திய 
பத்திகளில் மேற்கோள் காட்டி இருக்கிறோம். மார்க்ஸ் 
1883இல் மார்க்ஸ் மறைந்தார். அவர் மறைந்து 11 ஆண்டுகள் 
கழித்துத்தான், அதாவது 1894இல், மூன்றாம் தொகுப்பு 
எங்கல்சால் வெளியிடப் பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
ஆங்கில மூலம் கீழே காண்க! (வாசகர்கள் 1853ஆம் ஆண்டின் 
கட்டுரையையும். நாம் மேலே குறிப்பிட்ட மூலதனம்-IIIஇன் 
இருபதாவது அத்தியாயத்தையும் முழுவதுமாகப் 
படிக்கும்படி வேண்டுகிறோம்.)
6. If any nation's history, then the history of the English in India is a string of futile 
and really absurd (in practice infamous) economic experiments. In Bengal they 
created a caricature of large-scale English landed estates; in south-eastern India
 a caricature of small parcelled property; in the north-west they did all they could 
to transform the Indian economic community with common ownership of the soil 
into a caricature of itself.
-------------------------------------------------------------------------
7. Since Russia has been making frantic exertions to develop its own capitalist 
production, which is exclusively dependent upon its domestic and the neighbouring 
Asiatic market, this is also beginning to change. — F.E.
8. The same is true of the ribbon and basting makers and the silk weavers of the 
Rhine. Even a railway has been built near Krefeld for the intercourse of these rural
 hand-weavers with the town "manufacturer." But this was later put out of business,
 together with the hand-weavers, by the mechanical weaving industry. — F.E.
---------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
************************************************************************
     
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக