வெள்ளி, 8 மே, 2015

ஜெயலலிதாவை விட செல்வாக்கில் உயர்ந்தவன் 
மேதகு கொலைகாரப் பாவி சல்மான் கான்!
---------------------------------------------------------------------------------
இருபத்தியொரு நாட்கள் பெங்களூரு பரப்பன
அக்கிரகாரத்தில் களி தின்ற பிறகுதான் ஜெ.வுக்கு 
ஜாமீன் கிடைத்தது. இவ்வளவுக்கும் ஜெ. கொலை 
எதுவும் செய்யவில்லை.
**
ஜெ. ஒரு பிரபல சினிமாக் கதாநாயகி. கட்சித் தலைவர்.
மூன்று முறை தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர்.
என்றாலும் களி தின்றார். இன்னமும் தின்பார்.
**
நல்லதொரு கொலையைச் செய்தவர் நம்மூர் ஜகத்குரு.
சர்வதேச கொலைகாரர்கள் சங்கத்துக்குத் தலைவராக 
இருப்பதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்க்கப் பெற்றவர்.
என்றாலும், வழக்கு விசாரணையில் இருக்கும்போதே,
(at the trial stage itself ), பல நாட்கள் ஜெயில் களியை 
உண்டவர். சூத்திர கிரிமினல்களோடு வாரக் கணக்கில் 
அடைத்து வைக்கப் பட்டு, கொழுப்பை வடித்து எடுத்த 
பிறகுதான் ஜகத்குருவுக்கு ஜாமீன் கிடைத்தது.
**
ஜெ.வும் ஜகத்குருவும் உயர்ந்த சாதிப் பிராமணர்கள்.
என்றாலும், இந்த நாட்டின் சட்டமும் நீதியும் அவர்களைக் 
களி  தின்ன வைத்தன.
**
ஆனால், மேதகு கொலைகாரப் பாவி சல்மான் கான், 
குடிபோதையில் காரை ஏற்றி, சாலை ஓரத்தில் படுத்திருந்த 
நூருல்லா என்ற அன்றாடங்காய்ச்சியை படுகொலை 
செய்த பாதகன். இந்த நாட்டின் சட்டமும் நீதியும் 
ரோமத்துக்குச் சமம் என்று நிரூபித்து உள்ளான்.
**
ஒரு படத்தில் நடிக்கச் சம்பளமாக ரூபாய் நூறு கோடி 
வாங்கும் சல்மான் கான் ஜெ.வும் ஜகத்குருவும் 
தொட முடியாத உயரத்தில் உள்ளான். சல்மான் கான் 
போன்ற உயர்வர்க்கச் செம்மல்களை, IPC, CrPC போன்ற 
சட்டங்களோ, நீதியோ ஒன்றும் செய்து விட முடியாது.
இதுதான் நவீன மனுநீதி. உயர் வர்க்க மனுநீதி!!
*************************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக