புதன், 13 மே, 2015

மொழி என்பது மேல்கட்டுமானமே என்றுதான் உலகம்
முழுவதும் உள்ள மார்க்சியர்கள் கருதி வந்தனர். சோவியத்
ஒன்றியத்தில் பேராசிரியர் நிக்கோலஸ் மார் என்பவர் இக்கருத்தைத்
தான் முன்வைத்து இருந்தார். இவர் வெறும் பேராசிரியர் மட்டும்
அல்லர். சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியால் அங்கீகரிக்கப்
பட்ட மொழியியல் கோட்பாட்டாளர் (LINGUISTICS THEORETICIAN).
**
1920இல் லெனின் வாழ்ந்த காலத்திலேயே (லெனின் மறைவு
1924இல்) சோவியத் ஒன்றியத்தில் மொழிச் சீர்திருத்தம்
மேற்கொள்ளப் பட்டது. இது பேராசிரியர் நிக்கோலஸ் மார் 
தலைமையில் நடைபெற்றது. 1920 முதல் 1950 வரை, சோவியத்
ஒன்றியத்தில் நிக்கோலஸ் மார் கருத்துக்களே செல்வாக்குடன்
இருந்தன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி 1950 வரை, நிக்கோலஸ்
மார் கோட்பாட்டையே, அதாவது மொழி என்பது மேல்கட்டுமானமே
என்ற கோட்பாட்டையே, ஏற்றுக் கொண்டிருந்தது.
**
முதல் முதலாக, 1950இல் ஸ்டாலின் பேராசிரியர் மார் கூறிய
கருத்துக்களை மறுத்து உரைக்கிறார். மொழி என்பது
மேல்கட்டுமானம் அல்ல என்கிறார். (பார்க்க: ப்ராவ்தா 1950)
-----------------------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக