புதன், 13 மே, 2015

மார்க்சியம்: அடித்தளமும் மேல்கட்டுமானமும்!
---------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------
ஒரு வீடு கட்டுகிறோம். வாணம் தோண்டி, அதாவது,
வலுவான அஸ்திவாரம் போட்டு, அதன் மீது வீடு 
கட்டுகிறோம். சிறிது காலம் கழித்து அந்த வீட்டின் மேல் 
ஒரு மாடி கட்டுகிறோம். இப்போது கீழ்வீடும் மேல்மாடியுமாக 
அந்த வீடு அமைந்து விட்டது.
**
மார்க்சியத் தத்துவமானது, மேலே கூறிய கீழ்வீடு-மேல்மாடி 
என்ற கருத்தமைவை ஒரு முக்கியமான அடிப்படையாக 
எடுத்துக் கொண்டு சமூகத்தை விளக்குகிறது.
கீழ்வீடு என்பதை அடித்தளம் என்றும், மேல்மாடியை 
மேல்கட்டுமானம் என்றும்  மார்க்சியம் வரையறுக்கிறது.
(Basic structure and Super structure)
**
"அடித்தளம் மேல்கட்டுமானத்தைத் தீர்மானிக்கிறது" என்பது 
மார்க்சியத்தின் அடிப்படைவிதிகளில் ஒன்று. (The base determines the 
superstructure).  இதன்படி, ஒரு சமூகத்தில் பொருளாதாரம் 
என்பது மிகவும் முக்கியமானது. இதுவே அந்தச் சமூகத்தின் 
அடித்தளம் (BASE) ஆகும். 
**
இந்த அடித்தளத்தின் மீது, கீழ்க்கண்ட மேல்மாடிகள் கட்டப் 
படுகின்றன. 1, அரசியல் 2. கலை 3. இலக்கியம் 4.மொழி 
5.பண்பாடு முதலியன.
ஆக, பொருளாதாரம் என்பது  அடித்தளம். அதன்மீது கட்டப் 
பட்ட மேல்மாடிகளே கலை, இலக்கியம் உள்ளிட்ட மற்றவை.
இதன் பொருள், அடித்தளம் மாறும்போது, மேல்கட்டு-
-மானங்களும்  மாறும் என்பதாகும்.
**
இந்த மார்க்சிய பால பாடத்தின்படி, மொழி என்பது 
மேல்கட்டுமானம் என்று நீண்ட காலமாக மார்க்சியர்கள் 
கருதி வந்தனர். ஆனால், இது தவறாகும். மொழி என்பது 
மேல்கட்டுமானம் அல்ல. எனவே மொழிக்கு வர்க்கச் சார்பு 
கிடையாது. மொழி வர்க்கங்களைக் கடந்து நிற்பது. சமூகம் 
முழுமைக்கும் பொதுவானது. வர்க்கச் சட்டகத்துக்குள் 
மொழியை அடைக்க முடியாது. LANGUAGE DOES NOT HAVE 
A CLASS CHARACTER. இதுதான் உண்மை.
-------------------------------------------------------------------------------------------
தொடரும் 
---------------------------------------------------------------------------------------------.   
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக