வியாழன், 21 மே, 2015

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் படவில்லை!
ஸ்ரீபெரும்புதூர் சம்பவம் ஒரு விபத்தே!
இதற்கான அறிவியல் நிரூபணம்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர் நியூட்டன் அறிவியல் மன்றம் 
சென்னை.
தொடர்புக்கு: ilangophysics@gmail.com 
------------------------------------------------------------------------------
1991 மே 21 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த வெடிகுண்டு 
விபத்தில் ராஜிவ் காந்தி பரிதாபமாக இறந்து போனார்.
அவர் கொலை செய்யப் படவில்லை.  
**
ராஜீவ் மரணம் குறித்த படங்களைப் பாருங்கள்.
ஆறு அடி உயரமும், 80 கிலோவுக்கு மேல் எடையும்
கட்டுமஸ்தான உடலும் உடைய ராஜீவ் காந்தி துண்டு 
துண்டாகச் சிதறிப் போனார். கால் ஒரு பக்கம், தொடை 
ஒரு பக்கம், பிருஷ்டம் ஒரு பக்கம் என ராஜீவ் சிதறிச் 
சின்னாபின்னம் ஆகிப் போனார். சின்னாபின்னம் ஆவது 
என்றால் என்ன என்று தெரியாதவர்கள், அன்று ராஜீவ் 
உடல் சிதறிப் போனதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
**
ஆனால், இடுப்பில் பெல்ட் வெடிகுண்டைக் கட்டிக் 
கொண்டு, ராஜிவைக் கொன்றதாகக் கூறப்படும், தாணுவின் 
உடல் சிதறிப் போகவில்லை. அப்படியே முழுசாக 
இருக்கிறது. தாணுவின் இறந்த உடல் பற்றிய 
படங்களையும் பாருங்கள். 
**
தாணுவின் உடல் எரியூட்டப் படாமல் பாதுகாக்கப் பட்டு 
வருகிறது. ஆனால், ராஜிவின் உடல் உடனடியாக எரிக்கப் 
பட்டு விட்டது. ராகுல் காந்தி கொள்ளி போட்ட காட்சிகளை 
நினைத்துப் பாருங்கள். 
**
நமது கேள்வி! வெடிகுண்டு இருந்த தாணுவின் உடல் 
சிதறவில்லை; முழுசாக இருக்கிறது. ஆனால், வெடிகுண்டு 
இல்லாத ராஜிவின் உடல் சிதறிப் போகிறது. இது எப்படி 
சாத்தியம்?
**
தாணுவை ( 5 அடி, 50 கிலோ) A என்க.
ராஜிவை (6 அடி, 80 கிலோ) B என்க.
A, Bக்கு இடையிலான தூரம் 30 cm (ஒரு அடி) என்க.
A யின் உடலில் சக்தி வாய்ந்த RDX வெடிகுண்டு உள்ளது.
Bயின் உடலில் வெடிகுண்டு இல்லை.
இப்போது A வெடிக்கிறது; ஆனால் சிதறவில்லை.
B வெடிக்கவில்லை; ஆனால் சிதறிப் போகிறது!!!! 
எந்த அறிவியலில் அய்யா இது சாத்தியம்?
தாணுவின் உடல் சிதறிப் போகாமல் முழுசாக 
இருப்பதற்கான அறிவியல் விளக்கம் என்ன 
கார்த்திகேயன் அவர்களே?
**
இதைப் படிக்கும் வாசகர்கள் தாங்களே ஒரு எளிய 
இயற்பியல் பரிசோதனையைச் செய்து பார்த்து 
நாங்கள் கூறுவது உண்மை என அறியலாம். துணைக்கு 
ஒரு ஃபிசிக்ஸ் மாணவனை வைத்துக் கொள்ளவும்.
**
1) தேநீர்க் கடைகளில் உள்ள இரண்டு கண்ணாடிக் 
குவளைகளை எடுத்துக் கொள்க. 
2)இவற்றை A, B என்று குறி இடுக. 
3)தீபாவளிப் பட்டாசான அணுகுண்டு ஒன்றை எடுத்துக் கொள்க.
**
4) குவளை A யின் உட்புறத்தின் அடியில் அணுகுண்டை 
வைத்து சிறிது பசை போட்டு மெலிதாக ஒட்டுக  (ஃபெவிகால் 
தேவையில்லை) 
5) 2X2X3 அளவுகள் உள்ள, அதாவது 2 அடி நீளம், 2 அடி அகலம்,
3 அடி உயரம் உள்ள ஒரு மெல்லிய திறந்த அட்டைப் பெட்டியை 
(சிகரெட் பாக்கட் கனம் போதுமானது) எடுத்துக் கொள்க. 
இல்லையேல், CHART CARDS மற்றும் பழைய செய்தித்தாட்கள் 
கொண்டு ஒரு அட்டைப் பெட்டி தயார் செய்க.
**
6) அணுகுண்டு ஒட்டப்பட்ட குவளை A மற்றும் குவளை B 
ஆகிய இரண்டையும் அட்டைப்பெட்டியின் உள்ளே, 10 செ.மீ
இடைவெளியில் வைத்து, பெட்டியை ஒரு சமதளப் 
பரப்பின் மீது வைக்கவும்.
7) இப்போது அணுகுண்டின் திரியில் தீ வைக்கவும்.
8) குவளை A மற்றும் குவளை B இரண்டும் உடைந்து 
சிதறுவதைக் காணவும்.
** 
தாணுவின் உடல் சிதறவில்லை; முழுசாக இருக்கிறது 
என்பது எதைக் காட்டுகிறது? தாணுவின் உடம்பில் 
குண்டு இல்லை என்பதைக் காட்டுகிறது.
**               
ஆக, தாணு என்ற பெண், ராஜீவ் காந்தியைக் கொல்லவில்லை 
என்று நிரூபித்து இருக்கிறோம். QED.
-------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
********************************************************************              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக