செவ்வாய், 2 ஜூன், 2015

உண்மையை அறியும் வழிமுறை என்ன?
இயங்கியலும் பரிசோதனை இயற்பியலும்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------
1) வாதம்-எதிர்வாதம்-தர்க்கம் என்பனவற்றின் மூலமாக 
உண்மையை அறிய முடியும் என்பது கிரேக்க அறிஞர்களின் 
கோட்பாடு. இக்கோட்பாடுதான் இயங்கியல் (Dialectics) என்று 
அழைக்கப் பட்டது.
2) ஜெர்மன் அறிஞர் ஹெகல் என்பவர் இயங்கியலை உச்ச 
கட்டத்துக்கு வளர்த்தார். இவரின் இயங்கியலை மார்க்சியம் 
அப்படியே ஏற்றுக் கொண்டு, நவீன அறிவியலின் துணையுடன்
மெருகு கூட்டியது.
**
3) என்றாலும், இயங்கியல் தற்போது வழக்கு வீழ்ந்து விட்டது.
உண்மையை அறிவதற்கான சரியான வழிமுறையாக 
இயங்கியல் இல்லை என்பதை அறிவியல் நிரூபித்து விட்டது.
4) சாராம்சத்தில் இயங்கியல் என்பது வெறும் தர்க்கம்தான் 
(formal logic) என்பதையும், தர்க்கத்துக்கு மேல் அதில் எதுவும் 
இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
**
5) இந்த இயங்கியல் மேதைகள்தான், "பூமி நிலையாக 
இருக்கிறது; சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது"
(Geocentric theory) என்று கூறியவர்கள்.
6) பரிசோதனை அறிவியல் (experimental science) என்பது 
தோன்றாத காலத்தில், இயங்கியல் மட்டுமே உண்மையை 
அறிவதற்கான வழிமுறையாக இருந்தது. சோதனை செய்து 
பார்த்து, பிரத்தியட்சமாக உண்மையை அறிவது என்ற 
வழிமுறை வளர்ந்தபின், இயங்கியல் காலாவதி 
ஆகி விட்டது.
**
7) Experiment-Observation-Inference என்ற முறையும், பல்வேறு 
சூழல்களில் பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து,
CONCORDANT VALUES பெறுவதும், தற்கால இயற்பியலில்,
புள்ளியியல் ரீதியாக அதிகபட்ச SIGMA LEVEL கிடைக்கப் 
பெற்றால் மட்டுமே ஒரு பரிசோதனையின் முடிவைச் 
சரி என்று ஏற்றுக் கொள்வதும், அறிவியல் காட்டும் 
உண்மையை அறிவதற்கான வழிமுறைகள்.
**
8) எந்த ஒரு அறிவியல் கொள்கையும் தவறு என்று 
நிரூபிக்கப் படுமேயானால், அது அக்கணமே 
கைவிடப்படும் என்பதும் நவீன அறிவியல் ஏற்றுக் 
கொண்டுள்ள கொள்கை முடிவு ஆகும்.
9) ஆக, தர்க்கம் (LOGIC) என்பதற்கு, அதற்கு உரிய 
முக்கியத்துவத்தை மட்டுமே அறிவியல் வழங்குகிறது.
தர்க்கத்தின் காலில் விழுந்து கும்பிட்டு ஆசி பெறுவது 
என்ற போக்கு அறிவியலில் கிடையாது.
*********************************************************     
  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக