வியாழன், 16 ஜூன், 2016

மோட்டார் வாகனப் பேரணியை ஜெயலலிதா
ரத்து செய்தது ஏன்? உள்மர்மம் அம்பலம்!
----------------------------------------------------------------------------------------
அவனன்றி அணுவும் அசையாது என்பார்கள் கடவுள்
பக்தர்கள். நளினி பேரறிவாளன் உள்ளிட்ட ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக் கோரி
மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவதற்கு,
ஜெயலலிதா சம்மதம் தெரிவித்தார். ஜெயலலிதா
சம்மதம் தெரிவிக்காமல் எதுவும் நடக்காது.

ஆனால் முதலில் அனுமதி கொடுத்த ஜெயலலிதா
கடைசி நேரத்தில் மனம் மாறி, வேலூரில் இருந்து
புறப்பட இருந்த பேரணிக்கு அனுமதி மறுத்து
விட்டார். இவ்வளவுக்கும் பேரணியின் போஸ்டர்களில்
ஜெயலலிதாவின் படம் மட்டுமே இருந்தது.

ஜெயா ஏன் மனம் மாறினார்? தானே அனுமதி கொடுத்த
வேலூர்ப் பேரணியை ஏன் ரத்து செய்தார்? இது குறித்து
கோட்டையில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படும்
செய்தி இதுதான்.

முதல்வரின் ஆலோசகரான உயர் அதிகாரி  பேரணி
குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தகவல்களை
சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது சிறையில்
இருக்கும் பேரறிவாளன் தன்னுடைய சுயசரிதையை
எழுத இருப்பதாக ஒரு தகவலையும் ஜெயலலிதாவிடம்
கூறினார். இதைக் கேட்டதும் ஜெயலலிதா மிகவும்
கோபம் அடைந்ததாகக் கூறப் படுகிறது.

அவர் என்ன மகாத்மா காந்தியா, சுயசரிதை
எழுதுவதற்கு?  (Is he Mahathma Gandhi to write autobiography?)
என்று கோபமடைந்த  ஜெயலலிதா உடனே
பேரணியை ரத்து செய்யச் சொல்லி உத்தரவிட்டார்
என்கிறார்கள் உயர் அதிகாரிகள்.

திமுகவோ வேறு எதிர்க்கட்சிகளோ பேரணி நடத்தத்
திட்டமிட்டால், அது கடைசி நேரத்தில் ரத்தாகும்
வாய்ப்பு உண்டு, ஆனால் தானே அனுமதித்த
தன்னுடைய புகழ் பாடும் பேரணியை ஜெயலலிதா
திடீரென ரத்து செய்தார் என்றால் அதற்கு காரணம்
இதுதான் என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

ஆர்வக் கோளாறு காரணமாக, பேரறிவாளன்
சுயசரிதை எழுதப் போகிறார் என்று ஊடகங்களுக்கு
பேட்டி அளித்த திரைப்பட இயக்குனர் ஜனநாதன்,
அற்புதம் அம்மாள் போன்றோர் சற்று அடக்கி
வாசிப்பது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.
அண்ணல் அம்பேத்காரோ தந்தை பெரியாரோ
சுயசரிதை எழுதவில்லை என்று சுட்டிக்
காட்டுகிறார்கள் அதிகாரிகள்.
**************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக