வெள்ளி, 17 ஜூன், 2016

குண்டு வெடிப்பதற்கு முன் தெரியாது!
வெடித்த பிறகுதான் தெரியும்!
பேரறிவாளனின் வழக்கறிஞர் வாதம்!
ஏற்றுக் கொண்டதா உச்சநீதிமன்றம்?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
ராஜிவ் கொலை வழக்கின் சிறப்பு  என்னவென்றால்
இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களின்
வாதத் திறமை இந்த வழக்கில் வெளிப்பட்டது.
சி.பி.ஐ தரப்பில் திரு ராஜமாணிக்கம் போன்ற மூத்த
வழக்கறிஞர்களின் அபாரமான வாதத்திறமை
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்தது.

அதுபோலவே குற்றவாளிகளின் தரப்பில், திரு நடராசன்
போன்ற மூத்த வழக்கறிஞர்களின் வாதத்திறமையால்
பேரறிவாளன் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தடா
சட்டத்தின் கீழ் விதிக்கப் பட்ட இரண்டு ஆயுள்
தண்டனைகள் உச்ச நீதிமன்றத்தால் ரத்து
செய்யப்பட்டன.

நடராசன்: மை லார்ட், என்னுடைய கட்சிக்காரர்
பேரறிவாளனுக்கு கொலைச்சதியில் எந்தப் பங்கும்
கிடையாது. அவன் வெறும் எடுபிடி மட்டுமே. சிவராசன்
சொன்ன வேலைகளை எல்லாம் அவன் செய்தான்.
அவ்வளவே. அவன் சதிகாரன் அல்ல. அவன்
ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்குப் போகவில்லை.

நீதியரசர் வாத்வா: கூட்டத்திற்குப் போகவில்லை
என்பதால் சதி செய்யவில்லை என்று எடுத்துக்
கொள்ள முடியாது. கொலைச்சதியில் அவனுக்கு
முக்கியமான பங்கு இருப்பதை சந்தர்ப்பங்கள்
உறுதிப்படுத்துகின்றன. 9 வோல்ட் பாட்டரி
வாங்கி கொடுத்ததை பேரறிவாளன் ஒப்புக்
கொண்டிருக்கிறான்.

நடராசன்: மை லார்ட், இங்கு ஒரு முக்கியமான
விஷயத்தை தங்கள் கவனிக்க வேண்டும். தான்
வாங்கிக்  கொடுத்த பாட்டரியால்தான் குண்டு
வெடித்தது என்ற உண்மை என் கட்சிக்காரருக்கு
(பேரறிவாளனுக்கு) எப்போது தெரியும் என்பது
இந்த வழக்கில் மிகவும் முக்கியமானது.

வாத்வா: சொல்லுங்கள், எப்போது தெரியும்?

நடராசன்: குண்டு வெடித்து ராஜிவ் காந்தி செத்த
பிறகே, தான் வாங்கிக்  கொடுத்த பாட்டரியால்தான்
குண்டு வெடித்தது என்ற உண்மை என்
கட்சிக்காரருக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது,
மை லார்ட்.

வாத்வா:  இதை ஏற்பதற்கில்லை. இதற்கு என்ன
நிரூபணம்?

இவ்வாறு வாதம் தொடர்ந்து கொண்டே போனது.
"இதை ஏற்பதற்கில்லை" என்று நீதியரசர் வாத்வா
எந்த அடிப்படையில் கூறினார் என்பதை  விரிவாக
விளக்க வேண்டும். அது இந்தக் கட்டுரையில்
சாத்தியமில்லை. தேவைப்பட்டால் அடுத்த
கட்டுரையில் எழுதப்படும்.

இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக, நீதியரசர் வாத்வா
அவர்கள் அளித்த தீர்ப்பின் ஆங்கில வாசகங்கள்:
---------------------------------------------------------------------------------------------
Conduct of Arivu (A-18) before and after the assassination of Rajiv 
Gandhi leaves no one in doubt that he was member of the conspiracy. 
It is not necessary for a conspirator to be present at the scene of the 
crime to be a member of the Conspiracy. Mr. Natarajan said that 
Arivu (A-18) was merely an errand boy and was following the 
instructions of Sivarasan and he himself had no active role to play. 
He said Arivu (A-18) bought the car battery and 9 volt golden power 
battery at the instance of Sivarasan......
****
Mr. Natarajan also said that the version of Arivu (A-18) that this battery 
was used for explosion of the IED was his knowledge derived after the 
explosion cannot be accepted. Arivu (A-18) has, therefore, been rightly 
convicted for various offences charged against him by the Designated Court.
---------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ராஜிவ் கொலை வழக்கில் நியூட்டன்
அறிவியல் மன்றம் கூறி வரும் செய்திகள், இதுவரை 
யாராலும், எந்த ஒருவராலும் சொல்லப் படாதவை.
இதை பகிர்பவர்கள் "இவை நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் கருத்துக்கள்" என்பதைத் தெளிவாகச் 
சொல்ல வேண்டும். Attribution is a MUST. 
****************************************************************************    

   
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக