செவ்வாய், 21 ஜூன், 2016

இக்கட்டுரை தொடக்கநிலை வாசகர்களுக்கானது.
பொருள்முதல்வாதத் தத்துவமான சாங்கியம் குறித்த
மிக எளிய விளக்கமே இது. சாங்கியம் எப்போது
தோன்றியது என்ற கால ஆராய்ச்சியும் அது குறித்து
நிலவும் பல்வேறு கருத்துக்களும் இக்கட்டுரையின்
நோக்கத்திற்கு அப்பாற்பட்டது. எனினும், தகவல்
பிழையைத் தவிர்க்கும் பொருட்டு, சற்று ஏறக்குறைய
புத்தரின் காலத்திற்குப் பிற்பட்டது என்று குறிப்பிட்டு
உள்ளோம். இங்கு பயன்பட்ட "சற்று ஏறக்குறைய"
என்ற சொல்லாட்சி, சாங்கியம் புத்தரின் காலத்துக்குச்
சற்று முற்பட்டது என்ற பொருளையும் தருகிறது.
**
அடுத்து, இக்கட்டுரையில் இந்தியா என்று குறிப்பிடப்
பட்டுள்ளது தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான்.
சாங்கியம் தமிழனின் கொடை என்றால், அது
நிறுவப்படுதல் வேண்டும். உலகம் ஏற்கும் விதத்தில்
அதை நிறுவிட வேண்டியது அக்கருத்தைக்
கூறுவோரின் கடமை ஆகும்.
**
நவீன அறிவியலில் வரும் Experiment, Observation,
Inference என்ற முறையை குறைந்த பட்சமாக
ஒரு ப்ளஸ் டூ மாணவன் (chemistry student) அறிந்து
இருப்பான். இந்த நவீன முறையுடன் சாங்கியம்
கூறும் பிரத்தியட்சம், அனுமானம், சாட்ச்சியம்
ஆகியவை ஒத்துப் போகின்றன என்பது இங்கு
குறிப்பிடத் தக்கது.   

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக