செவ்வாய், 21 ஜூன், 2016

வெட்ட வெளியில் நிற்கிறோம். தூரத்தில் இருந்து புகை
வருகிறது. புகையை நம் புலன்களால் உணர்கிறோம்.
(புலன்கள் = மெய், வாய், கண், மூக்கு, செவி). இதுதான்
பிரத்தியட்சம். (பிரத்தியட்சம் = புலன்களால் அறிதல்)
**
புகை வருகிறது என்றால் அங்கு நெருப்பு இருக்க
வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். இது அனுமானம்.
இது ஆறாம் அறிவால் (பகுத்தறிவு) பெறப்படுகிறது.
**
என்றாலும், இவ்விரண்டும் மட்டும் போதாது. அதாவது,
பிரத்தியட்சமும் அனுமானமும் மட்டும் போதாது.
இதற்கு சாட்சியமும் வேண்டும்.
**
சற்று நேரத்தில் புகை வரும் திசையில் இருந்து
ஒருவர் வருகிறார். அவரிடம் விசாரிக்கும்போது
அவர் கூறுகிறார்: "அங்கு ஒரு கூட்டத்தார் வந்து
தங்கியுள்ளனர்; அவர்கள் உணவு சமைக்கின்றனர்".
**
இப்போது நமக்கு சாட்ச்சியமும் கிடைத்து விடுகிறது.
இதுதான் சாங்கியம் முன்வைக்கும் அறிதல் முறை
(EPISTEMOLOGY).    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக