திங்கள், 9 நவம்பர், 2015

கடந்த 2010 தேர்தலில், பீஹார் தேர்தல் முடிவுகளும் 
இன்று 2015 தேர்தல் முடிவுகளும்: ஓர் ஒப்பீடு!
தேர்தல் ARITHMETIC தரும் படிப்பினை என்ன?
----------------------------------------------------------------------------------------
2010 பீஹார் சட்டமன்றத் தேர்தல்:  
நான்குமுனைப் போட்டி. மொத்த இடங்கள்:243.
பாஜக, நித்திஷ்குமார் கட்சியான JDU இரண்டும் கூட்டணி.
போட்டியிட்ட இடங்கள்: JDU-141, BJP-102 (மொத்தம் 243)

லாலு கட்சியான RJD, பாஸ்வான் கட்சியான LJP 
ஆகிய இரண்டும் கூட்டணி.
போட்டியிட்ட இடங்கள்: லாலு-168, பாஸ்வான்-75 மொத்தம்-243.

காங்கிரஸ் 243 இடங்களிலும் தனித்துப் போட்டி.
மேலும் கம்யூனிஸ்டுகள் சுயேச்சைகள் தனித்துப் 
போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுகள் 2010:
--------------------------------------
நித்திஷ்-115, BJP-91, மொத்தம் வெற்றி-206.
லாலு-22, பாஸ்வான்-3, மொத்தம் வெற்றி-25
காங்கிரஸ்-4, மற்றவர்கள்-8. (மொத்தம்-243)

2015 தேர்தலில் கூட்டணி மாற்றம் பாரதூரமாக இருந்தது.
தேர்தல் முடிவுகள்-2015
-----------------------------------------
நித்திஷ்+லாலு+காங்கிரஸ் = 71+80+27 = 178.
பிஜேபி+பாஸ்வான்+மஞ்சி+RLSP = 53+2+2+1 = 58
CPI(ML)+மற்றவர்கள் = 7.  (மொத்தம்-243)

படிப்பினை: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
----------------------------------------------------------------------
தமிழ்நாட்டுக் கட்சிகள் இந்த இரண்டு தேர்தல்களில் 
இருந்தும் படிப்பினை பெற வேண்டும். தேர்தல் கணக்கு 
(ELECTION ARITHMETIC) எவ்வளவு சக்திவாய்ந்தது, 
எப்படி செயல்படுகிறது என்பதை இந்த இரண்டு 
தேர்தல்களின் முடிவுகள் உணர்த்துகின்றன.
******************************************************************           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக