புதன், 11 நவம்பர், 2015

ஐ.ஐ.டி என்பது ஐயர்-ஐயங்கார் டெக்னாலஜி அல்ல! 
ஐ.ஐ.டி ஒரு சூத்திர மடமே!
சூத்திர பஞ்சமப் பெற்றோர்களே,
உங்கள் பிள்ளைகளை ஐ.ஐ.டி.யில் சேருங்கள்!
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------------------------
ஐ.ஐ.டி ஒரு சூத்திர மடம் என்று அடித்துக் கூறுகிறோம் யாம்.
இது வெறுமனே ஒரு கூற்று அல்ல. (Not a mere statement).
மாறாக இது ஒரு தேற்றம் ஆகும். (but a theorem).
கணிதக் கோட்பாடுகளின்படி, ஒரு கூற்று நிரூபிக்கப் 
பட்டிருந்தால், அது தேற்றம் ஆகும். A statement with a proof is called
a theorem. எனவே மேற்கூறிய எமது கூற்று ஒரு தேற்றம் ஆகும்.   

இதற்கு முன்னர் பல முறைகள் ஐ.ஐ.டி ஒரு சூத்திர மடம்
என்பதை நிரூபித்துள்ளோம். மேலும் நிரூபிக்க இருக்கிறோம்.

இந்தியா முழுவதும் 17 ஐ.ஐ.டி.கள் உள்ளன. இவற்றில் 
B.Tech படிப்பிற்கு பத்தாயிரம் இடங்கள் உள்ளன. B.Tech தவிர,
M.Tech, M.Sc உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை ஐ.ஐ.டி.கள் 
வழங்குகின்றன. அவை குறித்து இக்கட்டுரை அக்கறை 
கொள்ளவில்லை. B.Tech பற்றி மட்டுமே எமது எல்லாக் 
கட்டுரைகளும் அக்கறை கொள்கின்றன.

ஐ.ஐ.டி.யில் சேர, இரண்டு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும்.
ஒன்று, IIT-JEE Mains. இதை அகில இந்திய அளவில் CBSE 
நடத்துகிறது. மற்றொன்று: IIT-JEE Advanced. இதை ஐ.ஐ.டி 
நடத்துகிறது.

2015க்கான JEE Main தேர்வை பதினைந்து லட்சம் பேர் 
எழுதினர். இதில் பத்து சதமான 1,50,000 (ஒன்றரை லட்சம்)
மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டத் தேர்வான 
Advanced தேர்வை எழுதத் தகுதி பெற்றனர்.

பொதுப்போட்டி: 75750 மாணவர்கள் (50.5%) 
OBC .......................: 40500 மாணவர்கள் (27%)
SC ...........................: 22500 மாணவர்கள் (15%)
ST............................: 11250 மாணவர்கள் (7.5%)

இவ்வாறு மொத்தம் 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 
சற்றுக்குறைய 10000 (பத்தாயிரம்) பேர் B.Tech படிப்பில் 
சேர்க்கப் படுவர். ஒன்றரை லட்சம் பேர் எழுதினாலும் 
பத்தாயிரம் பேருக்குத்தான் இடம் கிடைக்கும். போட்டி 
எவ்வளவு கடுமையானது என்பதை இதில் இருந்து அறியலாம்.

ஐ.ஐ.டி.யில்  சேரும் OBC மாணவர்கள் அனைவரும் ஏழைகளே.
ஏனெனில், கிரீமி லேயர் அல்லாத மாணவர்களுக்கு 
மட்டுமே இங்கு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
உதாரணமாக, OBC சாதியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,
நீதிபதிகள், பெருநிலச் சுவான்தார்கள் ஆகியோரின் 
பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது. மத்திய மாநில 
அரசு அலுவலகங்களில் பியூன் வேலை பார்ப்பவர்கள்,
டெலிபோன் மெக்கானிக்குகள், குமாஸ்தாக்கள். எளிய 
விவசாயிகள், பெட்டிக்கடை வைத்திருப்போர் இன்ன பிறர் 
ஆகியோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே OBC பிரிவில் 
இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.

ஐ.ஐ.டி.யில் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. காரணம் 
கட்டணத்தை அரசு நிர்ணயிக்கிறது. கார் ஷெட்டில்
பொறியியல் கல்லூரி நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில்
ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் என கட்டணம் வசூலிக்கப் 
படுகிறது. ஆனால் மிக உயர்ந்த அகக் கட்டுமான வசதி 
(infrastructure) கொண்ட ஐ.ஐ.டி.களில் கட்டணம் மிகக் குறைவு.
(இது குறித்து அறிய எமது பழைய கட்டுரைகளைத் தேடிப்
படிக்கலாம்).

படித்து முடித்தவுடன் வேலை சர்வ நிச்சயம். சம்பளம் 
குறைந்தது ஆண்டுக்கு 20 லட்சம்.

எந்த ஒரு ஐ.ஐ.டி.யிலும் எந்த ஒரு நேரத்திலும், பார்ப்பன 
மாணவர்களை விட, பார்ப்பனர் அல்லாத மாணவர்களே 
அதிகம். எனவேதான். ஐ.ஐ.டி.யை ஒரு சூத்திர மடம் 
என்று நாங்கள் அடித்துக் கூறுகிறோம். மொத்தமுள்ள 
10000 ஐ.ஐ.டி மாணவர்களில் உறுதியாக 9000 பேர் 
பார்ப்பனர் அல்லாதவராக இருக்கையில் அது எங்ஙனம் 
ஐயர்-ஐயங்கார் டெக்னாலஜியாக இருக்க முடியும்?    

சூத்திரன் படித்து முன்னேறி விடக் கூடாது; அவன் 
எப்போதும் ஒரு தற்குறியாகவே இருக்க வேண்டும்;
அப்போதுதான் அவனை ஏய்த்துப் பிழைக்க முடியும் 
என்று எண்ணுபவர்கள் மட்டுமே, "ஐ.ஐ.டி என்றால் 
ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி; அது நமக்குச் சரிப்படாது;  
அங்கே போகாதே" என்று சூத்திரப் பிள்ளைகளைத் 
தடுக்கிறார்கள். இதுதான் உண்மை.

நாங்கள் இங்கு கூறி இருப்பது தவறு என்றால், அதை 
தவறு என்று எவர் வேண்டுமானாலும் நிரூபிக்கலாம்.

பின்குறிப்பு: ஐ.ஐ.டி. தேர்வுகள் குறித்த ஒரு புரிதலைப்
பெற்றிட, கீழ்வரும் எளிய IIT-JEE கணக்கைச் செய்யவும்.

(This sum is from IIT JEE Maths paper 1984; marks-2)
THREE IDENTICAL DICE ARE ROLLED. THE PROBABILITY 
THAT THE SAME NUMBER WILL APPEAR ON EACH OF THEM IS:
a) 1/6, b) 1/36, c) 1/18, d)1/36. Choose the correct answer.    
*************************************************************                

                  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக