திங்கள், 30 நவம்பர், 2015

மொழியை ஓர் உயிரினத்துடன் ஒப்பிடலாம். சூழலுக்குத் தக்கவாறு
தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்களே காலத்தை
வென்று வாழ்கின்றன; மற்றவை மடிகின்றன. அதுபோன்று
மாறிவரும் உற்பத்தி முறைக்கு ஏற்றவாறு அதில் பங்கேற்கவல்ல
மொழிகளே வாழும். பிற அழியும்.
**
காலத்தை வென்று நிற்கும் வல்லமை எந்த மொழிக்கும் இல்லை.
மார்க்சியம் மொழி குறித்த ஒரு தொடக்க நிலைச் சித்திரத்தை,
சரியான சித்திரத்தை வழங்கி இருக்கிறது. பின்நவீனத்துவம்
பல படிகள் முன்சென்று, மொழி என்பதை அக்கு வேறு  ஆணி வேறாக
அலசி இருக்கிறது.
**
ஒரு மோட்டார் பைக்கில், ideal roadஇல் அதிகபட்சம் 150 kmph
வேகம் வரை செல்ல முடியும். 1000 kmph வேகம் என்பது
சாத்தியம் அற்றது. அதுபோலவே, pre feudal காலத்தில்
தோன்றிய தமிழ் அக்காலத்துக்கே உரிய கட்டுமானத்தைக்
கொண்டது. நவீன காலத்தின் தேவைகளுக்கு அக்கட்டுமானம்
ஈடு கொடுக்க இயலாது.
**
Academic lingustics அடிப்படையில் நான் பேசவில்லை. காரணம்
அதை நான் கற்கவில்லை. மார்க்சியம் தொட்டு இன்றுவரை
வளர்ந்து வரும் மொழி பற்றிய கருத்துக்களின் அடிப்படையிலும்
எனது சொந்த அனுபவத்திலும் சரியென்று உணர்ந்தவை
பற்றியே நான் கூறுகிறேன்.
**
எனவே, தாங்கள் கூறியபடி வேறொரு தளத்தில் இது பற்றிப்
பின்னர் பேசலாம். ஏனெனில், இத்தளம் பெரிதும் academics
சார்ந்தது.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக