வியாழன், 12 நவம்பர், 2015

2015 ஐ.ஐ.டி. மாணவர்கள் சேர்க்கை விவரங்கள்!
கறாராகச் செயல்படுத்தப்படும் இட ஒதுக்கீடு!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: இந்தப் பதிவு பெற்றோர்கள் மற்றும் 
மாணவர்களுக்கானது.
------------------------------------------------------------------------------
2015 B.Tech சேர்க்கை cut off மதிப்பெண் விவரம்:
மொத்த மதிப்பெண்கள்:504
----------------------------------------------------
பொதுப்போட்டி: (open competition).. = 124 மதிப்பெண் 
பிற்பட்டோர் (non-creamy layer OBC);=112  மதிப்பெண்    
SC, ST மற்றும் ஊனமுற்றோர் .......= 62 மதிப்பெண் 
SC,ST with 50% marks Relaxation.............= 31 மதிப்பெண் 

மேற்கூறிய CUTOFF அடிப்படையில் நடப்பாண்டில் 
(2015இல்) மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.
SC,ST மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட CUTOFF மதிப்பெண் 
பெறாத நிலையில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி 
வகுப்புகள் (Preparatory course) நடத்தி, அதில் 50 சதம் 
மதிப்பெண் தளர்ச்சி (relaxation of marks) வழங்கப்பட்டு      
B.Tech படிப்பில் சேர்க்கப் படுகிறார்கள். இவ்வாறு நிரப்பப் 
படாத SC, ST காலியிடங்கள் நிரப்பப் படுகின்றன.

மொத்தம் 17 ஐ.ஐ.டி.கள்  உள்ளன.
மொத்த B.Tech மாணவர்கள் =9885.
கட்டண விவரம்:
--------------------------
பொதுப்பிரிவு மற்றும் OBC மாணவர்களுக்கான 
கட்டணங்கள்:


Total payable fee at the time of admission for each IIT includes 
IIT Bhubaneswar (Rs. 68,600), IIT Bombay (Rs. 67,876),
 IIT Delhi (Rs. 56,635), IIT Gandhinagar (Rs. 62,600), 
IIT Guwahati (Rs. 56,600), IIT Jodhpur (Rs. 68,750), 
IIT Kanpur (Rs. 66,517), IIT Kharagpur (Rs. 57,876), 
IIT Madras (Rs. 54,927), IT Mandi (Rs. 62,300), 
IIT Patna (Rs. 60,250), IIT Roorkee (Rs. 63,820), 
IIT Ropar (Rs. 58,650), IIT (BHU) Varanasi (Rs. 66,200) and 
ISM Dhanbad (Rs. 49,842) .

However, fee will be much less for SC and ST candidates. 
SC,ST மாணவர்களுக்கு இதே கட்டணத்தின் அடிப்படையில் 
கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. சலுகை போக, 
நிகரக் கட்டணம் மிக மிகக் குறைவே. இது அந்தந்த ஐ.ஐ.டி.யைப் 
பொறுத்து மாறுபடும். அனேகமாக SC, ST  மாணவர்கள் 
மெஸ் பீஸ் கட்டினாலே போதும் என்ற அளவில் இருக்கும்.

நமது வேண்டுகோள்:
--------------------------------------
எங்கள் காலத்தில் நாங்கள் எல்லாம் ஐ.ஐ.டி. என்று ஒன்று 
இருப்பதே தெரியாமல் வாழ்ந்தோம். தெரிந்தாலும், முடவன் 
கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை போலத்தான்.
எனவே SC, ST மாணவர்களே, அவர்தம் பெற்றோர்களே, 
ஐ.ஐ.டி.யில் சேர்வது என்பது உங்கள்  உரிமை.  அந்த உரிமையைப் 
பறிகொடுத்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளை ஐ.ஐ.டி.யில் 
சேருங்கள்.
***********************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக