சனி, 28 நவம்பர், 2015

அறிவியல் விளக்கம்
-------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
கொடுக்கப்பட்ட வீடியோ காட்சியில், ஒருவர் சூடான பாலை
ஆற்றுகிறார். சுழன்றுகொண்டே ஆற்றுகிறார். அவர்
சுழன்றாலும் பாத்திரத்தில் இருந்து பால்
சிந்துவதில்லை. இது பார்ப்பவருக்கு வியப்பைத் தருகிறது.
எனினும் சிறிது பயிற்சிக்குப் பின், ஆர்வம் உள்ளவர்களால்
இதை எளிதில் செய்ய இயலும்.

அவர் பயன்படுத்தும் இரண்டு பாத்திரங்களும் அ) வாயகன்ற
விளிம்பில் மடிந்து ஒரு விரற்கடை அளவுக்கு நீண்டவை.
ஆ) உள்ளிருக்கும் பாலை விட கொள்ளளவு அதிகமானவை.
இ) வழக்கமாக காப்பி ஆற்றும் தம்ளர்களை விட உயரமானவை.
ஈ)இரு பாத்திரங்களும் கைப்பிடி உடையவை (அல்லது கைப்பிடி
போன்று பிடித்துக் கொள்ள வசதி உடையவை).

இதனால், பாலை வேகமாக ஆற்றும்போதோ, சுழன்றுகொண்டே
ஆற்றும்போதோ பால் சிந்தி விடாமல் இருக்க ஏதுவாகிறது.
சுருங்கக் கூறின், the geometry of the containers is helpful in preserving
the liquid without spilling.

சூடான பாலை குடிப்பதற்கு ஏற்ற சூட்டில் தருவதற்காக,
அதை ஆற்றித் தருவார்கள். சூடான பால் convection மூலமாக
சூட்டை இழக்கிறது. இது அன்றாடம் நம் வாழ்வில் பயன்படும்
இயற்பியல் கோட்பாடு. இது அனைவரும் அறிந்ததே.

இங்கு சுழன்றுகொண்டே பாலை ஆற்றும்போதும், பால்
சிந்தாமல் எப்படி ஆற்ற முடிகிறது என்பதுதான் கேள்வி.

பாலை ஆற்றுபவர் இரண்டு விதமான இயக்கங்களை (motions)
மேற்கொள்கிறார். தமது இடுப்பை ஒரு புள்ளியில் (சிறிய ஸ்டூல்)
இருத்திக் கொண்டு வட்டமாகச் சுற்றுகிறார். (This is a circular motion).

அடுத்து அவரின் உடலின் மேற்பகுதியில் இன்னொரு இயக்கம்
நடைபெறுகிறது. தம் கைகளால் பாலை ஆற்றுகிறார். இவ்விரு
இயக்கங்களும் ஒன்றையொன்று பாதிப்பதில்லை. எனவே
பால் சிந்துவதில்லை.   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக