வெள்ளி, 13 நவம்பர், 2015

ஐ.ஐ.டி.யில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு!
2012இல் 325 ஏழை மாணவர்கள் தெரிவு!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------
மதச் சிறுபான்மையினருக்கான 4.5 சதம் இடஒதுக்கீடு 
OBCக்குரிய 27 சதம் ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக
வழங்கப்பட வேண்டும் என்று 2012ஆம் ஆண்டு முதல் 
ஐ.ஐ.டி. நிர்வாகம் முடிவு எடுத்தது.   

இதன்படி, 325 முஸ்லிம் மாணவர்கள் B.Tech சேர்க்கைக்கு 
பட்டியல் இடப்பட்டனர்.(shortlisted).இவர்கள் அனைவரும் 
ஏழை மாணவர்கள். அதாவது கிரீமி லேயர் அல்லாத 
பிற்பட்ட முஸ்லிம் மாணவர்கள்.

இதுபோக, பொதுப்பிரிவில், 180 முஸ்லிம் மாணவர்கள் 
சேர்க்கைக்காக பட்டியல் இடப்பட்டு உள்ளனர். மேலும்
ஒரு முஸ்லிம் மாணவர் எடுத்துள்ள அதிகபட்ச RANK 
159 ஆகும். 9500 இடங்களில் ஒரு முஸ்லிம் மாணவர் 
159ஆவது இடத்தைப் பெற்றுள்ளார் என்பது பெருமைக்கு 
உரியதாகும்.

இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன?

பாப்பானுக்குத்தான் படிப்பு வரும்!
பாப்பானுக்குத்தான் அறிவு அதிகம்!
பாப்பாந்தான் ஐ.ஐ.டி. பரீட்சையில் பாஸ் பண்ண முடியும்!

இப்படியெல்லாம் சில சமூக விரோதிகள் மேற்கொண்ட 
பொய்ப்பிரச்சாரம் தவிடு பொடி ஆகி விட்டது என்பதைத் 
தான் மேற்கூறிய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

எனவே, இசுலாமிய அன்பர்களே, உங்கள் பிள்ளைகளை 
ஐ.ஐ.டி.யில் சேருங்கள். ஐ.ஐ.டி நமக்கு உரிமை உள்ள 
இடம். அது நமது இடம். அது பார்ப்பானுக்கு மட்டும் 
சொந்தமானது அல்ல.

பின்குறிப்பு: மதரீதியான இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் 
இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது.
****************************************************************** 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக