செவ்வாய், 17 நவம்பர், 2015

சாரலின்போது எவரும் குடை விரிப்பதில்லை!
நாகர்கோவிலில் மழை இல்லை!
---------------------------------------------------------------------------
திட்டமிட்டபடி தேர்வு இனிதே நடந்தேறியது. 'அறிவியல் ஒளி'
ஏடும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமும்
(Tamilnadu Science and Technology Centre) இணைந்து நடத்தும்
பள்ளி மாணவர்களுக்கான (9, 10 வகுப்புகள்) அறிவியல்
திறனறி தேர்வு ஞாயிறு அன்று (15.10.2015) காலை பத்து
மணிக்கு குறித்த நேரத்தில் நடைபெற்றது.

நாகர்கோவில் கேம்ப் ரோடில் உள்ள அல்போன்ஸ் மேனிலைப்
பள்ளியைத் தேர்வு மையமாகக் கொண்டு, பல்வேறு பள்ளி
மாணவ மாணவியர் இத்தேர்வை எழுதினர். தேர்வாளராக
(Examiner) நான் சென்றிருந்தேன். சிறுகுடை  ஒன்றை எடுத்துச்
சென்றிருந்தேன்.

இருப்பினும் குடை விரிக்கப்படவே இல்லை. ஏனெனில் மிக
மெல்லிய சாரல் மட்டுமே வீசியது. சாரலின்போது குடை
பிடிக்கும் பழக்கம் தமிழனுக்கு இல்லை.

தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம்
வீசும்போது சாரல் என்பார் கவிஞர் வைரமுத்து.
வடகிழக்குப் பருவக்காற்றுக்கும் அவர் ஒரு கவிதை
எழுத வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
****************************************************************           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக