செவ்வாய், 17 நவம்பர், 2015

"அலைபாயுதே கண்ணா" பாடலை ஆகச் சிறப்பாகப்
பாடியவர் ஏசண்ணன் (கே ஜே யேசுதாஸ்) மட்டுமே.
பித்துக்குளியாரிடம் உருக்கம் மட்டுமே உண்டு. அதுவும்
டி.எம்.எஸ்.சுடன் ஒப்புநோக்கும் இடத்து சற்று மாற்றுக்
குறைவானதே. அலைபாயுதே பாடல் ஒரு பெண்ணின்
விரக தாபத்தைப் பற்றிய பாடல். சிறந்த பாடகர் என்பவர்
தம் சாரீரத்தில் அந்த பாவத்தைக் கொண்டுவர வேண்டும்.
அதைச் சிறப்பாகக் கொண்டு வருபவர் ஏசண்ணன்.மேலும்
ஏசண்ணன் கர்நாடக இசையில் (இது தமிழிசையே)
சிகரங்களை அநாயாசமாகத் தொட்டவர். பித்துக்குளியாருக்கோ
மூச்சு முட்டும். மேலும் தாபத்துக்கு அவர் எங்கே
போவார், பாவம்.
**
முக்தி அடைந்து விட வேண்டும் என்று துடிக்கும் ஒரு அறுபது
வயதுக் கிழவன் இறைவனை நோக்கி உருகிப் பாடுவதாகத்தான்
பித்துக்குளியார் பாடி இருக்கிறார். அதில் மோகனமும்
நளினமும் பெண்ணின் விரகமும் துளி கூட இல்லை. இத்தகு
உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு பாடல் கூட பித்துக்குளியார்
பாடியது இல்லை. ஏனெனில், அவரால் அத்தகு உணர்ச்சிகளைக்
கொண்டு வரவே  இயலாது.
**
இது ஒரு romantic song. ஆனால் பித்துக்குளியாரோ இப்பாடல்
முழுவதும் முகாரி பாடுகிறார். சங்கதிகளைக் கையாள்வதிலும்
அவரிடம் ஒரு தெளிவு இல்லை. ஒரு விரகதாபப் பாடலை
எப்படிப் பாடக்கூடாது என்பதற்கு பித்துக்குளியாரின் இப்பாடல்
சிறந்த உதாரணம் ஆகும்.
**
ஏசண்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, மகாராஜபுரம் சந்தானம்
ஆகியோர் பாடிய அலைபாயுதே பாடலைக் கேளுங்கள்.
பித்துக்குளியார் குறித்த மெய்யான மதிப்பீட்டுக்கு
வருவதற்கு இவை துணை புரியும்.
N.B: If you feel embarrassed by this comment, dont hesitate to delete it.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக