திங்கள், 2 நவம்பர், 2015

சீக்கியர் ஒருவர் காங்கிரசாரால் உயிரோடு எரித்துக்
கொல்லப்படும் காட்சியும் வரலாறும்!
-----------------------------------------------------------------------------------
பொற்கோவில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்
என்பதற்காக இந்திரா காந்தியை சீக்கிய மதவெறியர்கள்
சுட்டுக் கொன்றனர். சீக்கிய மதவெறியர்களுக்குப் பாடம்
கற்பிக்கிறோம் என்று கூறிக் கொண்டு காங்கிரசார் 3000
சீக்கியர்களைக் கொன்றனர். சஜ்ஜன் குமார், கமல்நாத் போன்ற
காங்கிரசின் இளம் தலைவர்கள் இந்தப் படுகொலையை
நடத்தினர். இந்தப் படுகொலை நடந்த நாள் இன்று (நவம்பர் 2)

ஒரு பெரிய ஆலமரம் விழுந்தால் நிலம் அதிரத்தானே
செய்யும் என்று இந்தப் படுகொலைகளை நியாயப் படுத்தினார்
ராஜீவ் காந்தி. 

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சீக்கியர்கள் தங்கள் தாடிகளை
சுத்தமாக மழித்துக் கொண்டு தங்கள் அடையாளத்தை
மறைத்துக் கொண்டு உயிர் தப்பினர். அன்றைக்கு (1985)
முடிதிருத்தும் சலூன்களில் ஒரு முடிவெட்டுக்கு 100 ரூபாய்
வாங்கினர். அன்றைய நிலையில் சாதரணமாக ரூ 10 மட்டுமே
வாங்குவது வழக்கம்.

இந்தப் படுகொலையின் கதாநாயகர்களில் ஒருவரான
கமல்நாத் 2014 வரை டாக்டர் மன்மோகன்சிங்கின்
அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்தார்.

பொற்கோவில் ராணுவ நடவடிக்கையான OPERATION
BLUESTARக்கு தலைமையேற்ற ராணுவத் தளபதி
வைத்யாவையும் காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்
கொன்றனர்.

3000 சீக்கியர்கள் படுகொலைக்குப் பின்னர் காலிஸ்தான்
தீவிரவாதம் முற்றிலுமாக ஒடுக்கப் பட்டது. அதன்பின்,
SIKH APPEASEMENT கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடித்தது.
இவையெல்லாம் வரலாற்றின் இருண்ட பக்கங்கள்.
 
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக