வெள்ளி, 20 நவம்பர், 2015

ராகுல் காந்தியைப் பற்றி வரும் செய்திகள் 
அதிர்ச்சி அளிக்கின்றன!
----------------------------------------------------------------------
ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இருந்தார் 
என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருந்தார்.
இருந்து விட்டுப் போகட்டுமே, அதனால் என்ன? இதுபோன்ற 
வெறும் செய்நுட்பக்கூறு சார்ந்த அற்ப விவரங்களை 
(a mere technicality, that too, trivial) பிரம்மாஸ்திரம் போல 
ஏவுவதால் என்ன பயன் விளையும்? சுவாமியின் 
வாள் வீச்சுகள் வெறும் அதிர்ச்சி மதிப்பைத் தவிர 
வேறு எதைத் தரும்? தந்து விட முடியும்? அதுவும் 
250 வோல்ட் அதிர்ச்சி அல்ல;  வெறும் 3 வோல்ட்
அதிர்ச்சிதான். 

எங்கோ அல்பேனியாவில் பிறந்து இந்தியாவுக்கு வந்து 
தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சேவை 
செய்த அன்னை தெரசா இந்தியராகவே அறியப் பட்டார்.   
அயர்லாந்தில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபிள் என்ற 
பெண்மணி விவேகானந்தருடன் இந்தியா வந்து கல்கத்தாவில் 
தங்கி ஆன்மீகப் பணிகளைச் செய்தார். சகோதரி நிவேதிதா 
என்று அறியப்பட்ட அவர் இந்தியராகவே மக்களால் 
ஏற்கப்பட்டார்.

ராகுல்காந்தி அந்நியர் அல்லர்.அந்நிய நாட்டவர் அல்லர்.
அவர் இந்தியரான நேருவின் கொள்ளுப் பேரன். நேரு-இந்திரா-
ராஜீவ்-ராகுல் என்ற வரிசையில் வரும் ராகுல் காந்தியை 
அந்நியர் என்று கூறுவதை எவரும் ஏற்கப் போவதில்லை.
எனவே, இதுபோன்ற frivolous objectionகளை எழுப்புவதைத் 
தவிர்த்து வேறு ஏதேனும் உருப்படியாக  டாக்டர் சுவாமி 
செய்யலாம்.

ஆனால், ராகுல் குறித்த பேரதிர்ச்சி தரும் செய்தி ஒன்று உண்டு.
2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதியன்று, அமெரிக்காவில்,
பாஸ்டன் நகரின் லோகன் விமான நிலையத்தில் அமெரிக்க FBI 
போலிசாரால் ராகுல் கைது செய்யப்பட்டார் என்பதே அச்செய்தி.
கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்கள் அடங்கிய சூட்கேசுடன் 
ராகுல் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து சோனியா காந்தி அன்றைய பிரதமர் 
வாஜ்பாய் அவர்களுடன் நேரடியாகத் தொலைபேசியில் பேசி,
ராகுலை விடுவிக்குமாறு கோரினார். சோனியாவின் 
கோரிக்கையை ஏற்று வாஜ்பாய் அமெரிக்க அதிகாரிகளுடன் 
பேசி, ராகுலை விடுவித்தார். இது வரலாறு.

ராகுல் காந்தியோ சோனியா காந்தியோ இன்றுவரை 
இதற்கான எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் 
விளக்கம் அளிக்கக் கடமைப் பட்டவர்கள். ஏனெனில், 
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக 
இருக்க வேண்டும்.
*********************************************************************      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக