புதன், 20 ஜூலை, 2016

1) ஆண்-பெண் சமத்துவமற்ற ஒரு சமூகத்தில்,
2) பெண்ணுக்கு உயிரை விடக்  கற்பு  உயர்ந்தது
என்ற கருத்து மேலாண்மை செலுத்தும் ஒரு
சமூகத்தில்,
3) கற்பழிக்கப்பட்ட பெண் சமூகத்தில்
மீண்டும் மானமுள்ள வாழ்க்கையை வாழ
இயலாது என்ற சூழல் நிலவும் சமூகத்தில்,
ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் அதிகபட்ச
தண்டனை கற்பழிப்பு என்று சமூகத்தின்
சட்டம் சொல்கிறது. எனவே பெண்ணைத்
தண்டிக்க நினைப்பவர்கள் அவளைக்
கற்பழிப்பதன் மூலம் அந்த தண்டனையை
நிறைவேற்றுகிறார்கள்.

தா பாண்டியன் அருள்வாக்கு!
----------------------------------------------------
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து
வருகிறது. என்றாலும் இதற்கு தமிழக அரசைக்
குற்றம் சொல்ல முடியாது.
-----தா பாண்டியன் அருள்வாக்கு------------------
ஆம் பாண்டியனாரே, இதற்கு ஜெயலலிதா அரசை
எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? இதற்கு
எத்தியோப்பிய அரசை அல்லவா குற்றம் சொல்ல
வேண்டும்! எத்தியோப்பிய அதிபர் அன்றோ
இதற்குப் பொறுப்பானவர்!

உலகக் கம்யூனிசத்தின் ஒப்பற்ற தலைவர்
அண்ணன் தா பாண்டியன் அவர்கள்
திருவாய் மலர்ந்து அவ்வப்போது அருளி வரும்
அருள்வாக்குகளை தமிழ்ச் சமூகம் போற்ற வேண்டும்.
*****************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக