வெள்ளி, 29 ஜூலை, 2016

1967 தேர்தலை திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று
அறிஞர் அண்ணா கனவிலும் நினைக்கவில்லை.
அண்ணா தென்சென்னை தொகுதியில் நாடாளுமன்றத்திற்குத்தான் போட்டியிட்டார்.
அண்ணா மட்டுமல்ல, கலைஞரோ நாவலரோ
மதியழகனோ கூட கழகம் ஆட்சியைப் பிடிக்கும்
என்று நினைக்கவில்லை.
**
1) எதிர்பாராத விதமாக
ஆட்சியைப் பிடித்து விட்ட நிலையில், 2) தேர்தல்
முடிவு வந்த சில நாட்களிலேயே ராஜாஜியுடனான
உறவு கசந்து விட்ட நிலையில், 3) எதிர்ப்புகள் பெருகி
விடுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று முடிவெடுத்த
அண்ணா, பெரியாருடன் சமரசமாகச் செல்வது என்று
முடிவு செய்தார். 1949இல் இருந்து பெரியாரின்
தீவிரமான எதிர்ப்பைச் சந்தித்து வந்த அண்ணா,
ஆட்சிக்கு வந்த பிறகும் பெரியாரின் எதிர்ப்பு
தொடருமேயானால், ஆட்சிப் பொறுப்பைச் சரிவர
நிறைவேற்ற முடியாது என்று கருதினார். எனவே
பெரியாருடன் சமரசமாகச் செல்வது என்று தீர்மானித்து,
தமது ஆட்சியைப் பெரியாருக்கு காணிக்கை
ஆக்குவதாக அறிவித்தார்.
**
அன்பில் தர்மலிங்கம் மூலமாக திருச்சியில் இருந்த
பெரியாரை தம் அமைச்சரவை சகாக்களுடன் நேரில்
சென்று சந்தித்தார். பெரியாரும் இந்த சமரசத்தை
மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். அவருக்கும்
அண்ணாவுடனான சமரசம் தேவைப் பட்டது.
**
ஆக, அரசியல் நிர்ப்பந்தகளே அண்ணா-பெரியார்
இருவரையும் சமரசத்திற்கு இட்டுச் சென்றது.
பின்னர் கலைஞர் முதல்வராக வந்த பின்பும்
அவருக்கும் பெரியாரின் ஆதரவு தேவைப் பட்டது.
ஏனெனில் திமுகவின் உயர்சாதித் தலைவர்களை
எதிர்த்துக் கொண்டு கலைஞர் முதல்வரானார்.
பெரியாரின் ஆதரவு கலைஞருக்கும் தேவை.
காரணம் அரசியல் நிர்ப்பந்தம்.
**       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக