புதன், 13 ஜூலை, 2016

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கடவுள் கொள்கை!
கொள்கைப் பிரகடனம்!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம்,
சீக்கிய மதம், இன்றைய புத்த மதம், இன்றைய
சமண மதம் உள்ளிட்ட உலகில் உள்ள ஒவ்வொரு
மதமும் கூறுகிற, மக்கள் வணங்குகிற கடவுள்
என்பது மொத்தப் பிரபஞ்சத்திலும் இல்லை.
கடவுள் என்பது முற்றிலும் கற்பனையான
ஒன்றே தவிர, உண்மையில் இருப்பது அல்ல.

இந்த உலகையோ பிரபஞ்சத்தையோ
உயிர்களையோ கடவுள் படைக்கவில்லை.
மாறாக மனிதன்தான் கடவுளைக்
கற்பனையில் படைத்தான்.

கடவுளே இல்லை என்னும்போது, கடவுளின்
மனைவியர், கடவுளின் மகன், கடவுளின் தூதர்
ஆகியவையும் கற்பிதங்களே.

பிரபஞ்சத்தின் இயக்கத்திலோ உயிர்களின்
இயக்கத்திலோ கடவுளுக்கு எவ்விதப் பங்கும்
இல்லை. ஏனெனில் இல்லாத கடவுள் எந்த
இயக்கத்திலும் பங்கெடுக்க இயலாது.

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் கடவுளுக்கு
ஒரு பௌதிகத் தன்மை வாய்ந்த இருப்பு
(physical existence) என்பது இல்லவே இல்லை.
**********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக