சனி, 16 ஜூலை, 2016

எம்ஜியார் என்னும் ராமச்சந்திர மேனன் நடித்த
என் கடமை வெளிவந்த அல்லது வர இருக்கிற நேரம்.
மேனன் கூறினார்: "காமராஜ்தான் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டிதான்". அன்றைய திமுகவினர்
மானமுள்ளவர்கள்.  மேனன் பேசிய பேச்சால் திமுகவினர்
கடும் அதிருப்தி அடைந்தனர். விளைவாக, என் கடமை
படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. வசூலில்
படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி மேனனுக்கு
ஒரு பாடத்தை உணர்த்தியது. அதுதான் "திமுகவை
விட்டு வெளியேற இன்னும் காலம் கனியவில்லை"
என்பது. இப்படி பல காலமாகத் திட்டமிட்டவர்தான்
மேனன். 1972இல் தான் எண்ணத்தைச் செயலாக்கிக்
காட்டினார்.
**
காமராசர் என்ற பெயர் காலத்துக்கும் திமுகவுக்கு
எதிராகவே இருந்தது. வரலாறு தெரியாத இன்றைய
திமுகவினரின்செயல் கடும் வேதனையைத் தருகிறது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக