செவ்வாய், 12 ஜூலை, 2016

ஊரில்  வாழக் கூடாது என்று யாரும் அவருக்குத்
தடை விதிக்கவில்லை. யாரும்  ஃபட்வா விதிக்கவில்லை.
அவரால் ஊரில் வாழ முடியவில்லை. ஒட்டுமொத்த
ஊரையும் பகைத்துக் கொண்டோம் என்று
உணர்ந்தார்; வெளியேறினார். அவர் வெளியேற
வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
**
திருச்செங்கோடு என்பது கிராமப்புறம். சென்னை
போன்ற பெருநகரம் அல்ல. நகர வாழ்க்கை வேறு;
கிராம வாழ்க்கை வேறு. யார் முகத்திலும் விழிக்க
முடியாத நிலையை ஏற்படுத்திக் கொண்டார்.
அதை உணர்ந்து வெளியேறினார். அவ்வளவே.


தாமாக வெளியேறியவரை விரட்டி அடித்தனர் என்று
கருதுவது கற்பனையே. இரண்டாவது, நடந்தது
கட்டப் பஞ்சாயத்து அல்லது சாதிப் பஞ்சாயத்து
என்று கூறுவோர் அதை நிரூபிக்க வேண்டும்.
சாதிப் பஞ்சாயத்தில் சாதித்தலைவர்களே முடிவு
எடுப்பார்கள். இந்த சமரசப் பேச்சுவார்த்தையில்
அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
**
பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களின் மீது
விவாதிக்கலாம். அவற்றின்மீது மட்டுமே விவாதிக்க
வேண்டும். அவற்றுக்குப் பதில் சொல்ல இயலாத
நிலையில், திசைதிருப்புதல் கூடாது.
**
மக்களை அவமதிப்பது மார்க்சியம் அல்ல. மக்களை
நேசிப்பதே மார்க்சியம். மக்களுக்கு எதிராக
மார்க்சியம் என்றுமே நிற்காது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக