திங்கள், 25 ஜூலை, 2016

Affirmative action என்றால் என்ன?
Affirmative action அடிபட்டுப் போகிறதாமே, உண்மையா?
கபாலித் தொழுநோயாளிகள் உணர்வார்களா?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------
WTO என்னும் உலக வர்த்தகக் கழகம் குறித்துப்
பேசுகிறபோதெல்லாம் Affirmative action என்பது
குறித்தும் பேச நேர்கிறது. குறிப்பாக புதிய கல்விக்
கொள்கை குறித்துப் பேசும்போதெல்லாம்
Affirmative action குறித்தும் அது அடிபட்டுப் போகும்
என்பது குறித்தும் பேச வேண்டிய தேவை எழுகிறது.

Affirmative action என்றால் என்ன? அது ஏன் எப்படி
அடிபட்டுப் போகிறது? அதாவது பாதிப்பு அடைகிறது?
புதிய கல்விக் கொள்கைக்கும் Affirmative actionக்கும்
என்ன தொடர்பு? அப்படியே Affirmative action அடிபட்டுப்
போனால்தான் என்ன? அதனால் என்ன குடியா
முழுகி விடப் போகிறது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எட்டுக் கோடித்
தமிழர்களுக்கும் விடை தெரிய வேண்டும்.
ஆனால் அடையாள அரசியல் என்னும் க்ஷய ரோகமும்
கபாலித் தொழுநோயும் பீடித்திருக்கக்
கூடிய தமிழ்ச் சமூகத்தில் இதைப்பற்றி அக்கறை
கொள்ள நாதி கிடையாது.

சமூக ரீதியாக மிகவும் வறுமையிலும் பின்தங்கிய
நிலையிலும் இருக்கிற பிரிவினருக்கு சில
சலுகைகள் வழங்குவதன் மூலமாக, அவர்களை
உயர்த்தும் நடவடிக்கைகளே Affirmative action எனப்படும்.
தீவிர முயற்சி என்று தமிழில் கூறலாம்.

எடுத்துக் காட்டாக SC, ST வகுப்பினருக்கு, இன்ன
பிறருக்கு மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீடு
வழங்குகின்றன. இந்த இட ஒதுக்கீடு Affirmative action
ஆகும்.

அண்மையில், IIT படிப்புக்கான கல்விக் கட்டணத்தை
(TUTION FEES) ரூ 90,000 இல் இருந்து ரூ இரண்டு லட்சமாக
மத்திய அரசு உயர்த்தியது. ஆனால் இந்தக் கட்டண
உயர்வு SC,ST மாணவர்களுக்கு கிடையாது என்றும்
அவர்கள் பழைய கட்டணத்தையே செலுத்தலாம்
என்றும் அரசு கூறியது. இது Affirmative actionக்கு
நல்ல உதாரணம் ஆகும்.
***************************************************************
(சென்னையில் நடைபெற்ற (24.07.2016, ஞாயிறு மாலை)
புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தரங்கில்
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர் தோழர்
பி இளங்கோ சுப்பிரமணியன் அவர்கள் பேசியது) 
--------------------------------------------------------------------------------------------------

   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக