ஞாயிறு, 24 ஜூலை, 2016

CBCS என்றால் என்ன?
CBCS பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
என்ன சார் நீங்க, CBCS பற்றி நான் ஏன் தெரிந்து கொள்ள
வேண்டும் என்கிறான் குட்டி முதலாளித்துவ விடலை.
கபாலியில் இருந்து என் மூளையை வெளியே
எடுக்கவில்லை; நீங்கள் CBCS பற்றிப் பேசினால்
எவனும் கேட்க மாட்டான் என்கிறான் கு.மு.விடலை.

ஆனாலும் CBCS பற்றி நாம் தெரிந்து கொள்ளத்தான் 
வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஓரளவேனும் 
புரிந்து கொள்ள இது உதவி செய்யும்.

CBCS என்றால் Choice Based Credit System என்று பொருள்.
இது கடன் வாங்கும் விவகாரம் அல்ல. இது 
கல்வித் துறையில் (academic) புழங்கும் ஒரு சொல்.

வெளிநாடுகளில், அதுவும் வளர்ந்த நாடுகளில் 
மட்டுமே புழங்கும் இந்தச் சொல்லை மன்மோகன் சிங் 
அவர்களும் மோடி அவர்களும் இந்திய மக்களுக்கு 
அறிமுகப் படுத்துகிறார்கள்.

சென்னை லயோலா கல்லூரியில் BSc Maths பட்டப் 
படிப்பு படிக்க விரும்பி அதற்கான விண்ணப்பத்தை 
வாங்குகிறீர்கள். படிப்பு குறித்த பின்வரும் தகவல்கள் 
உங்களுக்குத் தெரிய வருகிறது.

1) BSc Maths படிப்பு ஆறு செமஸ்டர்களைக் கொண்டது:
2) மூன்று ஆண்டு காலம் படிக்க வேண்டும்.
3) Maths majorக்கு Physics மற்றும் Statistics பாடங்கள் உண்டு.
இவை allied subjects (அல்லது ancillary) ஆகும்.
மேற்கூறிய தகவல்களை அறிந்து கொள்கிறீர்கள்.

CBCS என்றால் மாணவன் தன்னுடைய விருப்பத்தின் 
பேரில் பாடங்களையும், கால அளவையும் 
(COURSE DURATION) தேர்ந்தெடுக்கலாம். இம்முறை 
மேனாடுகளில் உள்ளது.

உதாரணமாக, B.Sc Maths படிப்பில் சேர விரும்பும் 
மாணவன், allied subjects பிரிவில் வழக்கமாக உள்ள 
இரண்டு பாடங்களோடு சேர்த்து, தான் விரும்பும்
History, Literature ஆகிய பாடங்களையும் பயில 
முடியும். ஆறு செமஸ்டர்-மூன்று ஆண்டுகள் 
என்பதற்குப் பதிலாக, 4 ஆண்டுகள்-8 செமஸ்டர் 
என்று எடுத்துக் கொள்ளலாம்.

இங்கு படிக்கும் courseஐ  மாணவன் தேர்வு செய்கிறான்.
எனவே இது choice based முறை ஆகும். மதிப்பெண்களுக்குப் 
பதிலாக grades வழங்கப்படும். outstanding, excellent, good
போன்ற கிரேடுகள் வழங்கப்படும். மாணவன் எடுத்த 
மார்க்குகள் (அதாவது கிரேடுகள்) தொடர்ந்து 
அவன் கணக்கில் வரவு வைக்கப்படும்; அதாவது 
கிரிடிட் செய்யப் படும். எனவே இது வரவு வைக்கும் 
முறையும் ஆகும். இவ்வாறு வரவு வைக்கப்பட்ட 
மதிப்பெண்களைக் கொண்டு, மாணவன் வேறு 
எந்தப் படிப்பையும் தொடர முடியும். ஆகவே 
இம்முறை CBCS ( Choice Based Credit System) என 
அழைக்கப் படுகிறது.

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இந்த 
முறைதான் கடைப்பிடிக்கப் படுகிறது. மோடி 
அரசின் புதிய கல்விக் கொள்கையில், வெளிநாட்டுப் 
பல்கலைகள் இந்தியாவில் அனுமதிக்கப் படுகின்றன.

வெளிநாட்டுப் பல்கலைகள் இங்கு வரும்போது,
அவர்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் 
கொள்ள வேண்டும் அல்லவா?! அதற்காக  CBCS 
முறையை மோடி அரசு அறிமுகப் படுத்துகிறது.
இது போன்ற விஷயங்களில் மோடி அரசு ஒரு 
கத்துக்க குட்டி அரசே. மன்மோகன் சிங்கின் 
அடிச்சுவட்டில் மிகவும் விசுவாசமாக மோடி 
அரசு பயணம் செய்கிறது.
---------------------------------------------------------------------------------------
புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தரங்கில் 
(ஞாயிறு 24.07.2016, சென்னை) நியூட்டன் அறிவியல் 
மன்றத் தலைவர் தோழர் பி இளங்கோ பேசியது.
********************************************************************
   
          

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக