சனி, 16 ஜூலை, 2016

ஆங்கில மொழியில் பயிற்சி அளிக்க நிறையப்  பேர்
இருக்கிறார்கள். எங்களுக்கு அதில் ஈடுபாடு இல்லை.
அறிவியல் பணியே மூச்சு வாங்குகிறது.  


நீங்கள் சொல்வது சரி. தேவைகள் நிறைய இருக்கின்றன.
மொழி கற்றல், கற்பித்தலில் ஈடுபாடு உள்ளவர்கள்
இந்தத் தேவையை நிறைவு செய்யலாம். மொழியும்
அதன் இலக்கணங்களும் அறிவியலைக் கட்டுப்
படுத்தாது என்ற நிலைப்பாட்டில் நீண்ட காலமாகப்
பயணம் செய்தாயிற்று. இன்றைக்கும் இந்த நிலைப்பாடு
சிந்தனையை ஆட்சி செய்கிறது. இந்நிலையில்
மொழி பயிற்றுவித்தலில் எங்ஙனம் ஆர்வம் வரும்?

பியூசி படிக்கும்போது கல்லூரி நூலகத்தில் உள்ள
Earl Stanley Gardner எழுதிய ஆங்கிலத் துப்பறியும்
நாவல்களைப் படித்தோம். பட்டப்  படிப்பு படிக்கும்போது,
மூத்த மாணவர்களைப்  பார்த்து, அவர்களிடம் இரவல்
பெற்று, ஹெரால்டு ராபின்ஸ, இர்விங் வாலஸ்
நாவல்களைப்  படித்தோம். கென்னடி கொலை
பற்றிய இர்விங் வாலஸ் எழுதிய The Plot என்ற நாவலைப்
படித்து முடிக்க மூன்று மாதமோ ஆறு மாதமோ
ஆனது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது
50 வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அகராதியைப்
புரட்ட வேண்டும். நாவலைப் படித்து முடித்த போது
எனது vocabulary எகிறி விட்டது. ஆங்கிலம் கற்பது
என்பது இப்படித்தான். ஒரேநாளில் கற்க முடியுமா
என்ன? (இங்கு நான் கூறுவது அறிவியல் படிக்கும்
மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக