வெள்ளி, 15 ஜூலை, 2016

தம்  இளமைப் பருவத்தில், ஜெயமோகன் தமிழ்நாட்டில்
தங்கி இருந்த காலம் மிகவும் குறைவு. எனவே தமிழக
அரசியலை அவர் நேரடியாக அறிந்தது குறைவே.


ஒட்டுக்குப் பணம் கொடுப்பது என்ற வழக்கத்தை
தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தது யார் தெரியுமா?
மூத்த திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களைக்
கேளுங்கள். அவர்கள் சொல்லுவார்கள். (ராஜாஜி
யாருக்கும் பத்து பைசா கொடுக்க மாட்டார்)

காமராசர் வாழ்ந்த காலம் பொதுவாழ்வு என்பது
நிறைய விழுமியங்களைக் கொண்டதாக இருந்தது.
மதிப்பீடுகள் (values) வீழ்ச்சி அடையாத காலம் அது.
அக்காலக் கட்டத்தில் பொதுவாழ்வில் உள்ளவர்களில்
அநேகமாக எல்லோருமே எளிய வாழ்க்கை,
லஞ்ச ஊழல் செய்யாமை ஆகிய பண்புகளில்
ஊறித்திளைத்து நின்றவர்கள் தான்.
**
பெரியார், காமராசர், கக்கன், அறிஞர் அண்ணா,
காயிதே மில்லத் ஆகிய மக்கள் தலைவர்கள்
அனைவருமே எளிய வாழ்க்கை, நேர்மை, தூய்மை
ஆகிய பண்புகளுடன் வாழ்ந்தனர். மறைந்த அப்துல்
கலாம் எவ்வளவு எளிமையாக முன்னுதாரணமாக
வாழ்ந்து மறைந்தார் இந்தக் காலத்திலும்.
**
எனவே காமராசர் மட்டுமே எளிமையாக வாழ்ந்தார்
என்று கூறுவது அறியாமையே.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக