வியாழன், 14 ஜூலை, 2016

பொருள்முதல்வாதத் தத்துவத்தை அறிவியல் ஏற்றுக்
கொள்கிறது. சரியாகச் சொல்லப் போனால், அறிவியல்
உருவாக்கிய ஒரு தத்துவமே பொருள்முதல்வாதம்.
**
இது தத்துவப்படி, சிந்தனை என்பது பொருளை
அடிப்படையாகக் கொண்டு எழுவது. அதாவது
சிந்தனை பொருளுக்குக் கட்டுப்பட்டது.
**
ஆயின், பொருள் என்றால் என்ன? பொருள் என்பது
மனித சிந்தனைக்கு வெளியே சுதந்திரமாக இருப்பது.
(matter is an objective reality). வெளியே நிலா காய்கிறது.
ஆனால் நிலா காயவில்லை என்று எவர் ஒருவரும்
நினைக்கலாம். என்றாலும் அந்த நினைப்பு
பொருளைக் கட்டுப் படுத்தாது.
**
எனவே சிந்தனை என்பது பொருள் சார்ந்து எழுவது.
-
பொருளே இல்லையென்றால் சிந்தனையே
இருக்கப் போவதில்லை.  
----------------------------------------------------------------------------------------------
அத்வைதத்தில் ஆதி சங்கரர் "விவகாரிக சத்தியம்"
என்று ஒன்றைக் கூறுவார். தெருவில் நடந்து போகிறீர்கள்.
வேகமாக  ஒரு மாட்டு வருகிறது; முட்ட வருகிறது.
நீங்கள் விலகி விட வேண்டும்; விலகி விடுகிறீர்கள்.
அங்கு முட்ட வரும் மாடு மாயை அல்ல. அவையெல்லாம்
விவகாரிக சத்தியம் என்கிறார் ஆதி சங்கரர்.


பொருளைப் பார்த்து சிந்தனை வருகிறது. அப்படி
வந்த சிந்தனைகளில் கடவுளும் ஒன்று. இந்த
பிரபஞ்சமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது சிந்தனை எங்கிருந்து வரும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக