ஞாயிறு, 10 ஜூலை, 2016

கிளியோபட்ராவா? பாஸ்கரரா?
யார் இன்றும் இளமையோடு இருப்பவர்?
லீலாவதியில் இருந்து ஒரு கணக்கு!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
பாஸ்கராச்சாரியார் 12ஆம் நூற்ராண்டில் வாழ்ந்த
இந்தியக் கணித மேதை. அவர் எழுதிய நூல்களில்
ஒன்று "லீலாவதி". அதில் இருந்து ஒரு கணக்கு.
பாஸ்கரரின் நினைவைப் போற்றும் விதத்தில்,
இந்தக் கணக்கை கணித மேதை சகுந்தலா தேவி
தம்முடைய PUZZLES TO PUZZLE YOU என்ற நூலில்
குறிப்பிட்டுள்ளார். அந்தக் கணக்கைப் பார்ப்போம்.

இந்தக் கணக்கின் வயது ஏறக்குறைய 800. என்றாலும்
இக்கணக்கு இன்றும் இளமையுடன் திகழ்கிறது.
Age cannot wither her beauty என்ற ஷேக்ஸ்பியரின் கூற்று
கிளியோபட்ராவை விட பாஸ்கரரின் கணக்கிற்குச்
சிறப்பாகப் பொருந்துகிறது.

ஒளிரும் விழிகள் கொண்ட ஓர் அழகி என்னிடம்
கேட்டாள்:
ஓர் எண்ணை 3ஆல் பெருக்கி, வரும் பெருக்கற்பலனின்
முக்கால் பாகத்தை அத்துடன் கூட்டி, 7ஆல் வகுத்து,
வகுத்து வரும் ஈவின் மூன்றில் ஒரு பாகத்தை
அதிலிருந்து கழித்து வருவதை அதனாலேயே பெருக்கி,
52ஐக் கழித்து, வர்க்கமூலம் கண்டு, 8ஐக் கழித்து,
10ஆல் வகுத்தால் கிடைப்பது 2 என்றால், அந்த
எண் என்ன?

The original English version of the sum:
----------------------------------------------------
A beautiful maiden with beaming eyes asks me which is the number
that, multiplied by 3, then increased by three-fourths of the product,
divided by 7, diminished by one-third of the quotient, multiplied by
itself, diminished by 52, the square root found, addition of 8,
division by 10 gives the number 2?

விளக்கத்துடன் கூடிய விடைகள் வரவேற்கப்
படுகின்றன.
***************************************************************
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக