சனி, 16 ஜூலை, 2016

விடையும் விளக்கமும்:
----------------------------------------------
சமதளம் வளைவான தளம்
----------------------------------------------------
1) சமதளம்  (flat surface) அன்றாட வாழ்வில் நாம் அறிந்ததே.
2) வளைவான தளம் இரண்டு வகைப்படும்.
குவி ஆடி, குவி லென்ஸ் (convex ) இவற்றை
மனதில் நினையுங்கள். இந்த வளைவு
நேர்மறையான வளைவு ஆகும் (positive curvature).
3) குழிந்த தன்மை உடைய வளைவும் உண்டு.
குதிரைச் சேணம் (horse's saddle) பார்த்து இருக்கிறீர்களா?
அது போன்று இருக்கும். அல்லது ஒரு குழி லென்ஸை
மனதில் நினையுங்கள். இது எதிர்மறை வளைவு
கொண்டது (negative curvature). இதற்கான படங்களை
ஆங்காங்கே கொடுத்துள்ளேன்.
4)  சமதளப் பரப்பில் முக்கோணங்களின் மூன்று
கோணங்களில் கூட்டுத்தொகை 180 டிகிரி.
5) நேர்மறை வளைதளப் பரப்பில், முக்கோணங்களின்
3 கோணங்களின் கூட்டுத்தொகை > 180 degrees.
6) எதிர்மறை வளைதளப் பரப்பில், முக்கோணங்களின்
3 கோணங்களின் கூட்டுத்தொகை < 180 degrees.
--------------------------------------------------------------------------------------------------   
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக