வெள்ளி, 15 ஜூலை, 2016

Devotion of suspect X என்ற ஜப்பானிய நாவலே திருஷ்யம்,
பாபநாசம் படங்கள் வெளிவரக் காரணம். தமிழ்,
மலையாளத்து திரைப்பட இயக்குனர்களுக்கு
மூளையோ அறிவோ கிடையாது. அந்த நாவலைப்
படித்து அதில் உள்ள கதைப்பின்னலை நமது
சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்து, படங்களைத்
தயாரித்து விட்டார்கள்.

பக்தவத்சலம் அமைச்சரவையில் ஸ்தல ஸ்தாபன
மந்திரியாக இருந்த திரு அப்துல் மஜீத் கூறியது:
விவசாயிகள்  எலிக்கறி சாப்பிடலாமே என்று.
1967 தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் மஜீத்
போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஏ ஆர் சுப்பையா
முதலியார் என்ற சுயேச்சை வேட்பாளர் சிங்கம்
சின்னத்தில் போட்டியிட்டார். அவரை திமுக
ஆதரித்தது. தேர்தல் முடிவு வந்தது:
மஜீத் தோற்றார்:
சுப்பையா முதலியார் வென்றார். இது வரலாறு.
இதை என் நேரடி அனுபவத்தில் இருந்து
சொல்கிறேன். புத்தகத்தைப் படித்துச் சொல்லவில்லை. 


தோழர் ஜெயமோகன் எழுதிய இக்கட்டுரையில்,
"நான் உணரும் வழிகள்" என்ற தலைப்பில் அவர்
கூறியவற்றில் (3) மற்றும் (5) ஆகிய இரண்டு
அம்சங்களும்  சிறந்தவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக